தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய்
சென்னை: தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்திருக்கிறது. இந்த தண்டனைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
மொத்த தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து வந்தன. இதனையடுத்து இன்று தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 9ம் தேதி காணவில்லை என்று, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், மே 11ம் தேதி, அதாவது சிறுமி காணாமல் போய் 2 நாட்கள் கழித்து, சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி பகுதியில் வசித்து வந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.
தூக்கு தண்டனை
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவர் கொலை செய்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் போலீசார் தர்ம முனீஸ்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இன்று இந்த வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. அதேபோல குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
போக்சோ நீதிமன்றம்
இப்படி இருக்கையில், இந்த தீர்ப்பை முதலமைச்சர் விஜய் வரவேற்றிருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு வரவேற்கத்தக்கது
இவ்வழக்கில் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, துரிதமாக விசாரிக்கப்பட்டு, தர்மமுனீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு, பாலியல் குற்றம் மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் மிகத் துரிதமாக நீதி வழங்கப்பட்டுள்ளது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் அரசின் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது" என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications