முத்து நகர் மக்களின் பல வருட கனவு.. தூத்துக்குடிக்கு வாரம் இரு சிறப்பு ரயில்.. ரயில்வே குட் நியூஸ்
சென்னை: கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலரும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாகவும் தொழில் நிமித்தாகவும் பயணிக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்வது என்றால் இவர்கள் கோவை வந்து அங்கிருந்து ரயில் அல்லது பேருந்துகளை பிடித்து தான் செல்ல வேண்டியுள்ளது.

இதனால், பயண நேரம் அதிகமாவதால் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. விடுமுறை காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் குடும்பத்துடன் பயணிக்கும் பயணிகள் தென் மாவட்டத்திற்கு செல்ல கடும் சிரமப்பட்டனர். இதனால், துத்துக்குடிக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 2 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த 2 ரயில்களின் போக்குவரத்தை வரும் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
அதே போல, கோவை மேட்டுப்பாளையம் வரை தற்போது மெமு ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை போத்தனூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தினசரி 3 முறை போத்தனூர் வரை இந்த மெமு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயிலை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி, பழனி, மற்றும் மதுரை வழியாக இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:- வரும் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கீழ்க்கண்ட ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
* மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி (வழி : கோவை, பொள்ளாச்சி, பழனி, மதுரை) வண்டி எண்-16765 / 16766.
* கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில், இனி நாள்தோறும் 3 முறை போத்தனூர் வரை நீட்டிக்கப்படுகிறது.
* மங்களூர் - ராமேஸ்வரம் (வாரம் இருமுறை). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications