ஒரு மாதத்தில் 25 ஆயிரம் பேர்.. ஸ்டாலின் முன் சூளுரைத்த தோப்பு.. என்ன போஸ்டிங்?
சென்னை: திமுகவில் இன்று இணைந்துள்ள தோப்பு வெங்கடாசலம் இன்னும் ஒரு மாதத்தில் மாற்றுக் கட்சியினர் 25 ஆயிரம் பேரை திமுகவில் இணைப்பேன் என சூளூரைத்த நிலையில் அவருக்கு என்ன மாதிரியான பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை போல் மாற்று கட்சியில் இருந்து வந்தோருக்கு திமுக உரிய மரியாதையையும் பதவியையும் கொடுத்து அழகுபார்த்து வருகிறது.
இது ஆரோக்கியமான அரசியல் என்றாலும் திமுகவில் பதவிக்காகவும் மக்கள் சேவை செய்யவும் பல தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் இது போல் மாற்று கட்சியினருக்கு பதவி கொடுப்பதை திமுகவினர் எதிர்த்து வருகிறார்கள்.

பதவி
திமுகவில் யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் பதவி மட்டும் கொடுக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இது நீண்டகாலமாக எழுந்து வருகிறது என்றாலும் இரு தினங்களுக்கு முன் திமுகவில் மகேந்திரன் இணைந்ததிலிருந்து வெளிப்படையாகவே ஒலித்து வருகிறது.

முன்னாள் எம்பி
இந்த நிலையில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும் முன்னாள் எம்பி ராசிபுரம் சுந்தரமும் திமுகவில் இணைந்துள்ளனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த இருவரும் தங்கள் பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள். இதில் தோப்பு வெங்கடாசலம் இன்னும் ஒரு மாதத்திற்குள் மாற்று கட்சியை சேர்ந்த 25 ஆயிரம் பேரை திமுகவில் இணைக்கிறேன் என சூளூரைத்துள்ளார்.

சுந்தரம்
இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலத்திற்கும் சுந்தரத்திற்கும் என்ன பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். பதவி கொடுப்பது குறித்து தொண்டர்களிடம் வெளிப்படையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் என்ன நடக்கும் என்பது குறித்த விவாதமும் நடந்து வருகிறது.

புதியவர்கள் செயல்பாடுகள்
ஒரு வேளை புதியவர்களின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு அதற்குரிய பதவிகளை ஸ்டாலின் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் திமுக மட்டுமல்ல எந்த கட்சியிலும் யார் இணைந்தாலும் முதலில் எதிர்பார்ப்பது மரியாதை, அன்பு, அங்கீகாரம், அது கிடைத்துவிட்டது. இதை தோப்பு வெங்கடாசலமே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications