சென்னையில் வாடகை அல்லது லீஸ் வீடு பார்க்குறீங்களா.. இந்த ஐந்து தப்புகளை மறந்தும் பண்ணிடாதீங்க
சென்னை: கல்வி ஆண்டு இறுதியில் தான் புதிய வீட்டிற்கு மாற பலரும் விரும்புவார்கள்.. அந்த வகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பலரும் வீடு மாறுவதற்கு தயாராகி வருகிறார்கள்.. புதிதாக வாடகை வீடு அல்லது லீஸ் வீடு மாற திட்டம் உள்ளவர்கள் எதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வாடகை அல்லது லீஸ் வீட்டில் வசிப்பவர்கள் கல்வி ஆண்டின் இறுதியான இப்போது தான் புதிய வீட்டிற்கு செல்ல விரும்புவார்கள்.. வாடகை வீடு அல்லது ஓத்தி வீடுகளை பொறுத்தவரை சில விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. இல்லாவிட்டால் வீட்டிற்கு குடி போன பின்னர் சிக்கலை சந்திக்க வேண்டியது வரலாம். எனவே கீழ்கண்ட விஷயங்களில் கவனமாக இருங்கள்.

புரோக்கரை வைத்து இப்போது எல்லாம் வீடு தேடுவதை மக்கள் விரும்புவது இல்லை.. சில தனியார் ஆன்லைன் இணையதளங்கள் மற்றும் ஆப்களில் வீடு தேடுகிறார்கள்.. அதனால் புரோக்கர் கமிஷனாக பணம் செலுத்த தேவையில்லை என்றாலும், அதில் சில சிக்கலும் உள்ளது. என்ன சிக்கல் என்றால், அந்த வீடு உண்மையில் அவருடையது தானா என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அதேபோல் வீட்டின் உரிமையாளர் எப்படிப்பட்டவர், அவருடைய வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் சரி செய்து தருவாரா.. வீட்டின் உரிமையாளர் அதிகப்படியான கடன் வாங்கி சிக்கியவாரா என்பதை அறிய முடியாது. அதேநேரம் புரோக்கர்கள் குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர்கள் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.. அதனால் கொஞ்சம் சிக்கல் குறையும். புரோக்கர் இல்லாமல் இந்த தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றால், தாராளமாக நீங்களே வீடு பார்க்கலாம்.
இரண்டாவது பிரச்சனை தண்ணீர்.. சென்னையில் உள்ள பெரிய பிரச்சனை தண்ணீர்.. கோடைக்காலங்களில் போர்களில் தண்ணீர் வராமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் மழைக்காலங்களில் தண்ணீர் தரைத்தளத்தை மூழ்கடித்து வெளியேற வழியில்லாமல் ஒரு வாரம் வரை கூட நம்மை நோகடித்துவிடும்.. இந்த இரண்டு பிரச்சனையும் இல்லாத இடமாக பார்க்க வேண்டும். சென்னையில் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை,கீழ்கட்டளை, வேளச்சேரி,துரைப்பாக்கம், பெருங்குடி, காரப்பாக்கம், பெரும்பாக்கம், நாவலூர், முடிச்சூர், தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2023 வெள்ளத்தின் போது தரைத்தளத்தில் தண்ணீர் பெரிய அளவில் வந்தது . இதனால் தரைத்தளத்தில் உள்ள பல வீடுகள் காலியாகிவிட்டன. இதுபோன்ற வீடுகளில் குடியேறும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள்.
மூன்றாவது பிரச்சனை வாடகை அல்லது லீஸ் ஒப்பந்தம்.. வாடகை ஒப்பந்தம் அல்லது லீஸ் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு பெயிண்டிங் செலவு யாருடையது, வீட்டின் பராமரிப்புகள் யாருடைய செலவு என்பதை தெளிவாக பேசி ஒப்பத்ததில் குறிப்பிட வேண்டும். வாடகை ஒப்பந்தததை கண்டிப்பாக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் அவரது வீட்டில் குடியேற சம்மதிக்கலாம்.. இல்லாவிட்டால் நிச்சயம் அந்த வீட்டை ஒதுக்கிவிடுங்கள்..
4வது பிரச்சனை.. பள்ளி, பேருந்து நிலையம்.. வாடகை அல்லது லீஸ் வீடு பார்ப்போர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்ல ஏதுவாக அருகில் பார்ப்பது நல்லது. அதேபோல் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக பகுதிகளின் அருகில் பார்ப்பது நல்லது. எல்லாவற்றுக்கும் கார் அல்லது இருசக்கர வாகனத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருந்தால் அந்த வீடுகளில் குடியேறுவதை ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்..
5வது பிரச்சனை குடிநீர், சாலை மற்றும் பாதாள சாக்கடை: சென்னையின் புறநகர் பகுதிகளில் குடிநீர், சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் இன்னமும் முழுமையாக முடியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கும். குடிநீர் வசதியும் பெரிய அளவில் இருக்காது.. பாதாள சாக்கடை வசதியும் இருக்காது.,. இதுபோன்ற இடங்களில் குடியேறும் முன்பு ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள்... வாடகை அல்லது லீஸ் பணம் குறைவாக உள்ளதே என்று நினைத்து சிக்கி கொள்ளாதீர்கள்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications