சென்னைக்கு ரிட்டன் வர்றீங்களா.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இறங்க தேவையில்லை.. இதை பாருங்க
சென்னை: பொங்கல் முடிந்து சென்னைக்கு ரிட்டன் வரப்போறீங்களா.. உங்களுக்குத்தான் இந்த தகவல்.. சென்னைக்குள் நுழைந்ததும், மின்சார ரயிலில் ஏறி உங்கள் வீட்டிற்கு போக விரும்புகிறீர்கள் என்றால், கிளாம்பாக்கத்தில் இறங்க வேண்டியதில்லை.. அதற்கு முன்பே இறங்க வேண்டும்.. இதை பற்றி பார்ப்போம்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது.

கோயம்பேடு போல் இல்லாமல், பேருந்துகளை நெரிசல் இன்றி நிறுத்தவும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படுகிறது.
பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும்.
இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது..
எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும்.
சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications