Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரிஜினல் கலைஞன் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது.. நாட்டுக்கே பெருமை சேர்த்த கலை இயக்குநர்.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசன், பாலமுரளி கிருஷ்ணா, கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், கல்கி கோச்சலின் போன்றோர் மட்டுமே பெற்றுள்ள செவாலியர் விருதினை பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியும் பெறப்போகிறார்.. இந்த விருதினை பெறப்போகும் 6வது இந்தியர் தோட்டா தரணி என்பதால், வாழ்த்துக்கள் அவருக்கு குவிந்தவண்ணம் உள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் தோட்டா தரணி.. இவரது அப்பா தோட்டா வெங்கடேஸ்வர ராவ் சினிமா பட உலகில் 50களில் பிரபலமான ஆர்ட் டைரக்டராக இருந்தவர்.. அப்பாவை போலவே மகனுக்கும் கலை ஆர்வம் சிறு வயதிலிருந்தே அதிகம்.. வீட்டு தரையில் சாக்பீஸால் ஏதாவது வரைந்து கொண்டே இருப்பாராம்.

Thota Tharani Chevalier Award Art Director

தரையில் மகன் வரையும் ஓவியத்தை பார்த்து வியந்த தந்தை, பென்சிலும், டிராயிங் நோட்டுகளும் வாங்கி தந்து ஊக்குவித்துள்ளார்.. கல்லூரியில் முதுகலை படிப்பை முடித்த தோட்டா தரணி, பிரெஞ்சு அரசாங்கத்தின் ஃபெலோஷிப் பெற்று, அங்கேயே சென்று படித்துள்ளார்.

பிறகு அப்பாவுக்கு உதவியாக ஆர்ட் டைரக்டராக பணிபுரிய துவங்கியிருக்கிறார்.. பிறகு நாகமல்லி என்ற தெலுங்கு படத்தில் முதல் முதலாக ஆர்ட் டைரக்டராக வாய்ப்பு பெற்றுள்ளார்.

அரண்மனை முதல் குடிசைகள் வரை

இதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பிரெஞ்சு, இத்தாலி என பல்வேறு மொழிகளில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றினார்.

குடிசைகள் முதல் அரண்மனைகள் வரை, போலீஸ் ஸ்டேஷன் முதல் கோட்டை கொத்தளங்கள் வரை, குடியிருப்புகள், கோவில்கள், பாலங்கள், கூடாரங்கள் என அத்தனையையும் கண்முன்னே செட்டிங்குகளாக கொண்டு வந்து காட்டியவர் தோட்டா தரணி. அவ்வளவு ஏன்? அர்ஜுன் என்ற தெலுங்கு படத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையே செட்டாக போட்டு வியக்க வைத்தவர்.

நாயகன் படத்துக்காக போடப்பட்ட மும்பை தாராவி செட் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.. அதேபோல காதலர் தினத்தில் வரும "நெட் சென்டர்", சிவாஜி படத்தில் வாஜி.. வாஜி..' பாடல் செட், இந்தியன் படத்தில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள் அனைத்தும் தோட்டாதரணியின் கைவண்ணம்தான்.

கடைசி விவசாயி

அதேபோல ரட்சகன், வாலி, குஷி, கடைசி விவசாயி உள்ளிட்ட எத்தனையோ படங்களுக்கு பிரம்மாண்டமான செட்களை போட்டு தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.. இதில் தசாவதாரம், பொன்னியின் செல்வம் போன்ற படங்கள் வரலாற்று நுட்பத்துடன் செதுக்கி வடிவமைக்கப்பட்டவையாகும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் பயணம் மேற்கொண்ட போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார். அந்த படத்தை தன்னுடைய கை வண்ணத்தில் உருவாக்கியவரும் தோட்டா தரணிதான்.

இப்படி 64 வருடங்களாகவே கலை வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்தி இந்திய அளவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக விளங்கும் தோட்டா தரணி, 2 முறை தேசிய விருது, 3 முறை ஆந்திர அரசின் நந்தி விருது, 4 முறை தமிழக அரசு விருது, ஒரு முறை கேரள அரசு விருது, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது போன்றவற்றை பெற்றுள்ளார்..

உலக அங்கீகாரம்

இப்போது செவாலியர் விருது தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாகவே இந்த செவாலியர் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.

இதுவரை சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோர் மட்டுமே இந்த விருதினை, பெற்ற நிலையில், தற்போது தோட்டா தரணியும் பெறப்போகிறார்.

அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நாளைய தினம் 'லா மேசான்' என்ற நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து, தோட்டா தரணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பெரியார் ஓவியம் - வாழ்த்துக்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்து செய்தியில் "ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

"கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்!" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+