டெல்லியில் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு எதிரொலி- திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்
சென்னை: டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்தித்த ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க. செல்வத்தை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக (Suspension) திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம். 1997-ல் அண்ணா திமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர். திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராகவும் இருந்து வந்தார் கு.க. செல்வம்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன், கொரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து தமக்கு மேற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் செல்வம். ஆனால் திமுக தலைமை, சிற்றரசுவை மேற்கு மாவட்ட செயலாளராக அறிவித்தது.
இதில் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் பாஜகவுக்கு தாவ முடிவு செய்துள்ளார். இதன் முதல்கட்டமாக டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செல்வம் தாம் பாஜகவில் இணையவில்லை; பாஜக தலைவரை சந்தித்ததற்காக கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.

இதேபோல் திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி (Suspension) வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என அவருக்கு விளக்கம் (Show Cause) கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications