Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்சங்களில் கோடிகளை சுருட்டி, சொந்த குடும்பத்தின் குதூகலம் மட்டும் போதுமா? திமுகவை சாடிய எல்.முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த குடும்பம் குதூகலமாக வாழ்ந்தால் போதும், தமிழக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எண்ணும் திமுகவினரிடம், மக்கள் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும்? கொள்ளை அடித்து, பல லட்சம் கோடி ரூபாயை சுருட்டுவது தான் திருட்டு திராவிட மாடல் ஆட்சி" என்று காட்டமாக திமுகவை விமர்சித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 'என் வாக்குச்சாவடி -வெற்றி வாக்குச்சாவடி' என்ற இலக்குடன் திமுகவினர் களப்பணியாற்றுவதற்கான பயிற்சி கூட்டத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

Thousands of Crores DMK BJP

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து அவற்றை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உதவும் பயிற்சி கூட்டமாக நடத்தப்பட்டது.

இப்பயிற்சி கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கொண்டு பேசும் போது, 'உங்கள் முகங்களில் நான் உதயசூரியனை பார்க்கிறேன். அதனை தமிழக மக்களிள் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமை பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

பாஜகவின் குறுக்கு வழிகள்

ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட்டை செட் செய்து கொள்ள வேண்டும்.. பூத்வாரியாக நடத்தும் கூட்டங்கள், அதில் நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கு போன்ற அனைத்து தகவல்களும் அடங்கிய ஷீட்டை மாவட்ட செயலாளர் மூலமாக எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.. வார வாரம் நீங்கள் அனுப்புவதை பார்த்துவிட்டு, நானே உங்களுக்கு போன் செய்து விசாரிப்பேன்.

பாஜகவின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது. அது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் புதிது புதிதாக குறுக்கு வழிகளை தேடுகிறார்கள்.

SIR முறையை கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்தணும்-னா அதுக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் திமுக நேரடியாகவே வலியுறுத்தியுள்ளது.

7வது முறையும் திமுக ஆட்சி

அதையும் மீறி முன்னெடுக்கப்படுகிற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமில்லை, மக்களோடு களத்தில் நின்று எதிர் கொள்ளும் வலிமையும் நமக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் நமக்கு மட்டும்தான் உண்டு.

ஆகையால், மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் SIR செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்க வேண்டும். திமுக 7-வது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுக-வுக்கு தான் இருக்கிறது என்று நிரூபிக்கணும்" என்றெல்லாம் பேசியிருந்தார்.

வெறுப்பு அரசியல்

ஸ்டாலின் தன்னுடைய கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசிவரும் விஷயங்களையும், முன்னெடுப்புகளையும் பாஜகவும் உற்று கவனித்தபடியே உள்ளது.. இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் தன்னுடைய கருத்தையும் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சொல்லும்போது, "தற்போது மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், வழக்கம்போல, மத்திய அரசு மற்றும் பாஜக மீது வன்மத்தை கக்கி உள்ளார். ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, நீட் என, மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக, வெறுப்பு அரசியலை அரங்கேற்றி இருக்கிறார்.

பல லட்சம் கோடி சுருட்டி..

தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், ஊட்டச்சத்து முதல் டாஸ்மாக் வரை, பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. பி.எம்., ஸ்ரீ திட்டத்தை, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா கூட, ஏற்று அமல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று ஸ்டாலின் விடாப்பிடியாக இருக்கிறார்.

சொந்த குடும்பம் குதுாகலமாக வாழ்ந்தால் போதும், தமிழக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எண்ணும் திமுகவினரிடம், மக்கள் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும்? கொள்ளை அடித்து, பல லட்சம் கோடி ரூபாயை சுருட்டுவது தான் திருட்டு திராவிட மாடல் ஆட்சி" என்று காட்டமாக கூறி உள்ளார் பாஜக மூத்த தலைவர் எல்.முருகன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+