சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு கொரோனா 'இத்தனை மடங்கு' அதிகரிக்கலாம்! சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை

By
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு கொரோனாவின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் AIIMS கல்லூரிக்கான இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும் - மா.சுப்ரமணியன்

    இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவும் மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கொரோனா பரவல் மூன்று மடங்காக‌ அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா முழுவதும் கொரோனா வேகம் எடுக்கிறது. புத்தாண்டுக்குப் பிறகு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது அதிரடியாக பரவி வருகிறது. அதோடு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒமிக்ரானும் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனாவின் வேகம் அதிகரித்திருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களின் நிலை கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேகதாதுவில் அணை கட்ட கோரி காங். பாதயாத்திரை.. கொரோனா பரவலால் தற்காலிகமாக ரத்து !மேகதாதுவில் அணை கட்ட கோரி காங். பாதயாத்திரை.. கொரோனா பரவலால் தற்காலிகமாக ரத்து !

     தமிழ்நாடு

    தமிழ்நாடு

    கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகளவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     அதிகரிக்கும் கொரோனா

    அதிகரிக்கும் கொரோனா

    தமிழ்நாட்டிலும் நேற்று கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 'தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,54,935 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது.

     பொங்கல்

    பொங்கல்

    கொரோனா அதிகரித்துவரும் நிலையில், பொங்கல் பண்டிகை வருகிறது. சென்னையில் கொரோனா அதிகரித்துள்ளது. இங்கிருந்து சொந்த ஊருக்கு நிறைய பேர் பஸ், ட்ரெயின் என செல்கிறார்கள். இவர்களால் கொரோனா அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

     விழா நேரம்

    விழா நேரம்

    விழா நேரத்தில் தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், கொரோனா முன்பு இருந்ததைவிடவும் அதிகரிக்கும். தமிழகத்தில் கொரோனா பொங்கலுக்குப் பிறகு மூன்று மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலையில் நிறைய பேருக்கு தொற்று ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Health officials say the number of corona cases will triple in Tamil Nadu after Pongal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X