அண்ணாமலை+ சசிகலா + ராமதாஸ்.. எடப்பாடி கனவில் மண்ணை அள்ளிப் போடும் மூவர் அணி! எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் சிக்கல் முளைத்திருக்கிறது. கடைசி நேரத்தில் சசிகலா உள்ளிட்ட சில தலைவர்கள் முக்குலத்து அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி நம்பி இருந்த மூன்று பெரிய வாக்கு வங்கிகள் பெரும் அதிர்ச்சியை அவருக்கு தர காத்திருப்பதாக சொல்கின்றனர் அதிமுகவினர்..

முதல் முறையாக மக்களை சந்தித்து முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 தேர்தலில் அவரும் ஓபிஎஸ்யும் இணைந்து தான் தேர்தலை சந்தித்தார்கள். 2017 அவர் முதலமைச்சரானபோது ஜெயலலிதா தான் கட்சியை வெற்றி பெற வைத்திருந்தார்.

TN Election Exclusive 2026

ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க தன்னை முன்னிலைப்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையான அதிமுக வரலாற்றில் ஒரு முறை கூட அதிமுக அடுத்தடுத்து இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி

அந்த பெருமையை தக்க வைக்க வேண்டுமென்றால் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் வென்றாக வேண்டும். இதுவரையில் நடந்த 10 தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்ன சொன்ன பாஜகவை கூட கூட்டணியில் சேர்த்து இருக்கிறார். மேலும் தானும், தன்னையும் மிகக்கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன் உடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவர் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் போய்விட்டது என்பது தான் உண்மை கள நிலவரமாக இருக்கிறது.

அண்ணாமலை

பாஜக வாக்கு வங்கி அப்படியே தனக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி நினைத்த நிலையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்றால் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை அகற்ற வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அதற்கு பிறகு தான் நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாஜக ஆதரவு

தொடர்ந்து தலைமை மீது அதிருப்தி இருந்த அண்ணாமலை தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் பாஜக ஆதரவு, குறிப்பாக அண்ணாமலை ஆதரவு இளைஞர்களின் வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்காது என்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி

அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சி.. தந்தை மகன் இடையேயான மோதல் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு அணிகளாக பிளவுண்டு போனது. அன்புமணி பாமகவை கைப்பற்றிய நிலையில் அவருடன் கூட்டணி அமைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அன்புமணிக்கு மாநிலங்கள் உறுப்பினர் பதவியும் அவரது கட்சிக்கு 18 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ராமதாஸ்

இந்த நிலையில் விட்டுவிட்டு தனது மகனை கூட்டணியும் சேர்த்ததால் அதிருப்தி அடைந்த ராமதாஸ் தொகுதிகளை அன்புமணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். மேலும் தொடர்ந்து வீடியோ கால் மூலமும் கடிதம் மூலமும் அன்புமணிக்கு வாக்களிக்க கூடாது என உருக்கமாக பேசி வருகிறார். உச்சபட்சமாக இன்று தனது ரத்தம் தனக்கு துரோகம் செய்துவிட்டது தொண்டர்கள் மருந்தாக இருப்பார்கள் என அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் எழுதிய கடிதம் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் வன்னியர் வாக்குகள் முழுமையாக அதிமுக பாஜக கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்குலத்தோர் வாக்குகள்

இது ஒரு புறம் இருக்க அதிமுகவின் மிகப்பெரிய பலமான முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. கடந்த 2001 தேர்தல் முதல் தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகவுக்கு பெரும் பலமாக இருந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை ஒதுக்கினார். தேர்தல் காரணமாக தற்போது டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்திருந்தாலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் சேர்ந்து இருக்கிறார்கள்.

2026 சட்டசபை தேர்தல்

மேலும் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சசிகலா வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். இதனால் முக்குலத்தோர் வாக்கு வங்கியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இப்படி வன்னியர் வாக்குகள், பாஜக ஆதரவு வாக்குகள், முக்குலத்தோர் வாக்குகள் ஆகிய எடப்பாடி பழனிச்சாமிக்கு வரும் நம்பிக்கை தந்த மூன்று வாக்கு வங்கிகளும் கிடைக்காது என்று சொல்கின்றனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு 2026 தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+