மும்மொழிக் கொள்கை: உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்க.. தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் மற்றும் தமிழக அரசு இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிப்பதாக அனுப்பிய கடிதத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அமைச்சரின் பதிவுக்கு, உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் என்று அவருக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை கடந்த சில ஆண்டுகளாக வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிய பேசிய அமைச்சர், மீண்டும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Kanimozhi MP DMK Dharmendra Pradhan

இதைத்தொடர்ந்து, தேசியக் கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே அனுமதி என்று கூறி திமுக உள்ளிட்ட கட்சியினர் கூறி வந்தனர். மும்மொழி கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு அண்மையில் நடைபெற்றது. அப்போது, பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என குறிப்பிட்டதால் திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, தனது வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். பின்னர், அவைக் குறிப்பில் இருந்து அந்த சொல் நீக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக கிளம்பியது.

அமைச்சரின் அவமரியாதையான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவையில், தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதாக தமிழக அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார். அந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கடிதத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு PM SHRI பள்ளிகளை மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் என்றும், மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக் கொள்வதாக நாங்கள் எங்குமே குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக் கொள்ளத்தக்கதோ, அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+