டாஸ்மாக்கில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றம்...சிக்கும் மாஜிக்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்?
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கூறப்படும் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியன்று ரூ500, ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் பொதுமக்கள் கியூவில் நிற்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. அப்போது வங்கி கணக்கில் பணம் எடுக்க ஏ.டி.எம்.மையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் சொந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் பல மணிநேரம் கியூவில் நின்று பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த களேபரத்தில் சிக்கி பலரும் மாண்டுபோயினர். நாட்டில் அப்போது அசாதாரண நிலை போன்ற சூழல் நிலவியது. பின்னர் புதியதாக ரூ2,000, ரூ500, ரூ100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சட்டவிரோத பண பரிமாற்றம்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட காலத்தில் அவற்றை வாங்க வேண்டாம் என தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை மீறியும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் புதிய ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக மாற்றியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ62 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதாக தகவல்களைப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல்
இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்றம் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெற்றதும் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையை வருமான வரித்துறை தூசு தட்டி உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தது வருமான வரித்துறை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடக் கூடாது என்பதற்காக செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாஜி அமைச்சர்கள் மூவருக்கு சிக்கல்?
அப்போது மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அத்துடன் திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத் ஆகியோர் அமைச்சர்களாகவும் இருந்தனர். இந்த மூவருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். இதுதான் இப்போது கோட்டை வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காகவும் பேசப்பட்டு வருகிறது.

கலக்கத்தில் மாஜி அதிமுக அமைச்சர்கள்
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் என பலரது மீதான வழக்குகளில் சோதனைகளும் விசாரணைகளும் சூடுபிடித்துள்ளன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை வழக்கில் மாஜி முதல்வ்ர் எடப்பாடி பழனிசாமி சிக்குவார் எனவும் கூறப்படுகிறது. குட்கா லஞ்ச ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், ரமண சிக்கியுள்ளனர். தமிழக மின்சார வாரிய அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்திலும் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்த வரிசையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கொத்தாக மாஜி அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இந்த வழக்கையும் லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுக்கப் போகிறதாம். இதனால் அதிமுக மாஜி அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில் இருக்கின்றனராம்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications