முதல்வரின் ஸ்பெஷல் கவனிப்பு! அமைச்சர் உதயநிதியின் கரங்களாக 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.. யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாக ரீதியாக உதவிடும் வகையில் 3 சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட உள்ளனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலராக உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்த 3 துறைகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 3 துறைகளின் செயலாளர்களாக உள்ள 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

3 கையெழுத்து

3 கையெழுத்து

மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, அவரது இருக்கையில் அமர வைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பொன்னாடை, மாலை அணிவித்தும் பூங்கொத்து, புத்தகம் கொடுத்தும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனுக்காகவும் 3 முக்கிய கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதில் முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை ரூ.47 கோடி செலவில் நடத்தும் கோப்பு ஆகும்.

3 துறைகள்

3 துறைகள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் உடன் மூன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்ற இருக்கிறார்கள். மூன்று முக்கிய துறைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் மூன்று துறைகளின் செயலாளர்களாக இருக்கும் மூன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து இனி பணியாற்ற இருக்கிறார்கள்.

அதுல்ய மிஸ்ரா

அதுல்ய மிஸ்ரா

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ் பணியாற்றுகிறார். இந்தப் பொறுப்பில் இருந்த அபூர்வா சமீபத்தில் மாற்றப்பட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியில் இருந்த அதுல்ய மிஸ்ரா மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைக்கப்பட்டார். அதுல்ய மிஸ்ராவே, நேற்று உதயநிதி ஸ்டாலினிடம் துறை ரீதியான கோப்புகளில் கையெழுத்துப் பெற்றார்.

உதயசந்திரன்

உதயசந்திரன்

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் செயல்படுகிறார். உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை தனி செயலரான உதயசந்திரன், உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். அதேபோல, இத்துறையின் சிறப்புச் செயலராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் செயல்படுகிறார்.

அமுதா ஐஏஎஸ்

அமுதா ஐஏஎஸ்

உதயநிதி ஸ்டாலினின் வசம் இருக்கும் வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரகக் கடன்கள் துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் இருக்கிறார். டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த அமுதா ஐ.ஏ.எஸ், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தமிழ்நாட்டுக்கு அழைக்கப்பட்டார். ஊரக வளர்ச்சித் துறைக்குச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த துறையில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரகக் கடன்கள் துறை தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டிருப்பதால், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதாவும் உதயநிதிக்கு பக்கபலமாகச் செயல்பட இருக்கிறார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வருகிறது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 44வது செயலாண்மைக் குழுவின் உறுப்பினராக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு பொறுப்பு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினின் சிறப்பு கவனிப்பு

ஸ்டாலினின் சிறப்பு கவனிப்பு

தனது மகன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக சிறப்பாகச் செயல்படும் வகையில், 3 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உதயநிதியின் கீழ் செயல்பட வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பதால், அவரது செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளால் பூதக் கண்ணாடியால் கண்காணிக்கப்படும். எனவே, சிறப்பான அதிகாரிகள் எனப் பெயர் பெற்ற மூவர் மூலம், உதயநிதி ஸ்டாலின் இந்தத் துறையில் திறம்படப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+