சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவில் விருப்ப மனு அளிக்க 28-ம் தேதி வரை கால அவகாசகம் நீட்டிப்பு... துரைமுருகன் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு , புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான கால அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

திமுக தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 Thuraimurugan has announcement Extension of time till 28th to submit optional petition in DMK

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-2-2021 புதன்கிழமை முதல் 24-2-2021 புதன்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுமென ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக தலைவரிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கிணங்க 28-2-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்:பொதுத் தொகுதி - ரூ.25 ஆயிரம் ஆகும். மகளிருக்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் - ரூ.15 ஆயிரம் ஆகும்.
குறிப்பு: வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.
விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The deadline for those who want to contest the Tamil Nadu and Pondicherry Assembly general elections as DMK candidates has been extended to the 28th, party general secretary Thuraimurugan said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X