மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு
ராஜ்ய சபா தேர்தலுக்கு வைகோ போட்டியிடுவார் என கூறப்படுகிறது
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூடிய சீக்கிரம் ராஜ்ய சபாவுக்கு சென்றுவிடுவார் போல தெரிகிறது.
40 வருஷத்துக்கு மேல் அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி வைகோ ஆவார். மிகச்சிறந்த ஞானம் உடையவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்பியாக இருந்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்.
ராஜ்யசபா, லோக்சபா என இந்த இரண்டிலுமே வைகோவின் ஆங்கில உரையை கேட்க நிறைய எம்பிக்கள் ஆர்வமாக இருப்பார்கள். இதில் எந்தவித கட்சி பாகுபாடும் இருக்காது.

டைகர்
பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி காரசார விவாதத்தில் ஈடுபடுவார் வைகோ. அதனால்தான் வைகோவை அன்று 'டைகர் ஆப் பார்லிமென்ட்' என கட்சி தலைவர்கள் அழைத்தார்கள். (இன்று இந்த பட்டம் கனிமொழிக்கு சென்றுவிட்டது வேறு விஷயம்)

திமுக
பின்னர் வைகோவின் அசுர வளர்ச்சி, மகன் மீதான கருணாநிதி பாசம் போன்றவைகள் காரணங்களாக நிற்க, வைகோ கட்சியை விட்டு வெளியேறும் நிலை வந்தது. காலத்தின் சூழல், திரும்பவும் திமுகவுடன் வைகோ கரம் கோர்க்கும் நிலை ஏற்பட்டது.

அப்செட்
நடந்து முடிந்த தேர்தலில் சீட் பேரம் எப்போது ஆரம்பமானதோ அப்போதே வைகோ பாதி அப்செட் என தெரிகிறது. 2 சீட் கூட ஒதுக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் வைகோவுக்கு இருந்ததாகவும், ஆனால் அதற்கு பதிலாக ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக தரப்பில் உறுதி தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

3 சீட்டுகள்
இப்போதைக்கு திமுகவால் 3 எம்பிக்களை ராஜ்ய சபாவுக்கு அனுப்பும் சாத்திய கூறு உள்ளது. அதனால் ஏற்கனவே உறுதி அளித்தபடி வைகோவுக்கு அந்த வாய்ப்பினை திமுகவும் வழங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவு
இந்நிலையில், மதிமுகவின் உயர்நிலைக்குழு, ஆட்சி மன்ற குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 30 -ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக அந்த கூட்டத்தில் ராஜ்ய சபா தேர்தல் வைகோ போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்கிறார்கள். ஒருவேளை வைகோ போட்டியிடுவதானால், 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜ்ய சபாவில் கர்ஜனை முழக்கம் கூடிய சீக்கிரம் கேட்க போகிறது என்று அர்த்தம்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications