சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்டக்க முண்டக்க வீடியோக்கள்.. ஜொள்ளு விட்ட டிக்டாக்கர்கள்.. பதறியடித்து வந்த இலக்கியா.. இது தேவையா?

பண மோசடி குறித்து டிக்டாக் இலக்கியா விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இலக்கியாவை நம்பி ஏமாந்த ஆண்களின் லிஸ்ட் என்று புது புகார் ஒன்று கிளம்பி உள்ளது.. ஆனால், "ஒன்னு சொல்றேன், தெரிஞ்சுக்குங்க. என்னுடைய லைஃப்புக்கு தேவையானது என்கிட்ட இருக்கு.. மத்தவங்களை ஏமாத்தி அதன்மூலம் சாப்பிடணும்னு அவசியம் எனக்கு இல்லை.. நான் யாரையும் ஏமாத்தல" என்று டிக்டாக் புகழ் இலக்கியா வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    கண்டக்க முண்டக்க வீடியோக்கள்.. ஜொள்ளு விட்ட டிக்டாக்கர்கள்.. பதறியடித்து வந்த இலக்கியா.. இது தேவையா?

    டிக்டாக்கில் கவர்ச்சிகரமான வீடியோக்களை பதிவிட்டு, அதன்மூலம் லட்சக்கணக்கானோரின் லைக்குகளை பெற்றவர் இலக்கியா.. இவரது பெயரில் போலி ஐடி ஒன்று உருவாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.. இலக்கியா அப்படி ஒரு ஐடியை உருவாக்கவே இல்லையாம்.. அதேபோல, இலக்கியா என்று நினைத்து ஏகப்பட்ட ஜொள்ளர்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி ஏமாந்தும் உள்ளனர்.

    Tik tok ilakkiya gives expalanation video

    ஒருநாள் இரவு முழுவதும் பெர்சனல் சாட்டில் விருப்பம்போல டிக்டாக் வீடியோ பதிவிடுவதாக ஆசைக்காட்டி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் என பேங்க் அக்கவுண்ட்டில் பணமும் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.. இலக்கியாவுடன் இரவெல்லாம் ஜொள்ளு விட்டுக் கொண்டு பேசலாம் என்று நினைத்து சில சபலிஸ்ட்களும் பணத்தை அள்ளி வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது!

    இதை பற்றி இலக்கியா 2 வீடியோ வெளியிட்டு விளக்கமும் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: என் பேர்ல நிறைய பேர் ஐடி கிரியேட் பண்ணியிருக்காங்க.. ஐடி கிரியேட் பண்றதால எனக்கு ஒரு பிராப்ளமும் இல்லை.. ஆனா அந்த ஐடியில் என் வீடியோ போஸ்ட் பண்ணியிருக்காங்க.. அந்த வீடியோக்கு கீழே பயங்கரமான கருத்தெல்லாம் எழுதி போட்டிருக்காங்க.. பொதுவா நான் வீடியோ போஸ்ட் பண்ணால், வெறும் வீடியோதான் போடுவேன்.. எதுவும் எழுத மாட்டேன்.. அது நான் இல்லை.. அப்படி திட்றதா இருந்தால், என் மேல கோபம் இருந்தால் கமெண்ட் பாக்ஸ்ல வந்து திட்டுங்க.. இந்த மாதிரி ஐடி கிரியேட் பண்ண வேணாம்.. அந்த வீடியோ என்னுடையதுதான்.. ஆனா எழுதி போட மாட்டேன்" என்று ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    மற்றொரு வீடியோவில் "நேத்து ஒரு வீடியோ போஸ்ட் பண்ணியிருந்தேன்.. என்னுடைய பேரில் போலி ஐடியை யூஸ் பண்றாங்கன்னு சொல்லியிருந்தேன்.. அதில் பாதி பேர் கமெண்ட் பண்ணியிருந்தாங்க.. உங்க ஐடின்னு நெனச்சு பணம் டிரான்ஸ்பர் பண்ணிட்டேன், என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லி இருந்தாங்க. ஒன்னு சொல்றேன், தெரிஞ்சுக்குங்க.

    என்னுடைய லைஃப்புக்கு தேவையானது என்கிட்ட இருக்கு.. மத்தவங்களை ஏமாத்தி அதன்மூலம் சாப்பிடணும்னு அவசியம் எனக்கு இல்லை.. இந்த போலி ஐடி கிரியேட் பண்றவங்களுக்கு ஒன்னு சொல்றேன், உங்க பேர் சொல்லி பணம் வாங்கிக்குங்க.. எதுக்கு என் பேர் சொல்லி வாங்கறீங்க? இந்த மாதிரி பண்ணாதீங்க... அது ரொம்ப தப்பு.. நான் பேசி வீடியோ போட்டது இல்லை.. ஆனால் இதை கேட்டதில் இருந்து மனசு ஒத்துக்கல.. அதுக்காகதான் இந்த வீடியோ போடறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Tik tok ilakkiya gives expalanation video about online money cheating
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X