வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. அழகா பிறந்து.. அந்த வலி இருக்கே.. "ரவுடிபேபி" கண்ணீர்
டிக்டாக் சூர்யாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை: "வாய்ச்சவனும் சரியில்லை.. வந்தவனும் சரியில்லை.. ஒரு பொண்ணுக்கு எவ்ளோ வேதனை பார்த்தீங்களா? சூர்யா எந்த அளவுக்கு அழகோ, அந்த அளவுக்கு மனசுக்குள்ள வேதனையும் வலியும் இருக்கு" என்று தற்கொலை முயற்சிக்கு முன்பு ரவுடிபேபி சூர்யா வெளியிட்ட டிக்டாக் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து திருப்பூர் வந்த டிக்டாக் பிரபலம் சூர்யா தன் வீட்டிற்கு வந்தார்.. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சூர்யாவை கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள நேரில் சென்று அழைத்தனர்.

அப்போது டெஸ்ட் செய்து கொள்வதற்கு முரண்டு பிடித்த அவரை, இறுதியில் ஒருவழியாக சமாதானப்படுத்தி டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றனர். பிறகு அவரது வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டினர்.
இதனிடையே டெஸ்ட் எக்க வந்த தன்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்டதாக, தனியார் டிவி செய்தியாளரை மிரட்டி சூர்யா ஒரு வீடியோவும் வெளியிட்டிருந்தார்.. இந்த கொலை மிரட்டல் வீடியோவை அடிப்படையாக வைத்து அவர் மீது அந்த செய்தியாளர் போலீசில் புகார் தந்தார்.
புகாரின்பேரில் வீரபாண்டி போலீசாரும் சூர்யா மீது அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கையும் பதிவு செய்தனர். இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சையும் தரப்பட்டதில் அவர் காப்பாற்றப்பட்டார்.
தற்போது, கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு சூர்யா வெளியிட்ட டிக்டாக் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக சிரித்து, கெத்தாக, நம்பிக்கையுடன் பேசும் சூர்யா, இந்த வீடியோவில் கண்ணீருடன் பேசுகிறார்.
அதில், "பெத்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. வந்தவனும் சரியில்லை.. வாழ்க்கை குடுக்க போறவனும் நிரந்தரம் இல்லை.. ஒரு பொண்ணுக்கு எவ்ளோ வேதனை பார்த்தீங்களா? சூர்யா அழகு மட்டும்தான் எல்லாரும் பார்த்திருக்கீங்க... சூர்யா எந்த அளவுக்கு அழகோ, அந்த அளவுக்கு மனசுக்குள்ள வேதனையும் வலியும் இருக்கு.. என்னை மிரட்டாதீங்கடா.. நான் ஒரு அப்பிராணி.. மிரட்டற அளவுக்கு ஒன்னும் இல்லை.. முடிஞ்சா, மிரட்டறதுக்கு பலனா, என்னைகூட்டிட்டு போய் உன் ஆசையை தீர்த்துக்கோ" என்று அழுகிறார்..
வீடியோ முழுவதும் சூர்யா அழுது கொண்டே பேசுகிறார்.. அளவுக்கு அதிகமாக நொந்துபோய், மனம் காயப்பட்டு இருந்திருப்பார் போலும்.. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சூர்யா குணமடைந்து வர வேண்டும் என்று அதற்கு கீழே பலர் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications