தேமுதிக தலைமை அலுவலகத்திலிருந்து கடைசி வரை நகராத 3 முக்கிய அமைச்சர்கள்! முதல்வர் போட்ட உத்தரவு!
சென்னை: விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் முடியும் வரை தேமுதிக தலைமை அலுவலகத்திலிருந்து 3 முக்கிய அமைச்சர்கள் கொஞ்சம் கூட நகரவில்லை.
விஜயகாந்த் குடும்பத்தினர் கேட்கும் உதவிகளை செய்து கொடுக்குமாறு முதலமைச்சர் போட்ட உத்தரவை ஏற்று கடைசி வரை தேமுதிக அலுவலகத்திலேயே அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். இது அங்கிருந்த தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தியது. இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு விட்ட நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன், தாமோ அன்பரசன் ஆகிய 3 பேர் மட்டும் விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்யும் வரை தேமுதிக அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். மற்ற அனைத்து முக்கியப் பிரமுகர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் அவர்கள் மூவரும் கடைசியாக தான் கிளம்பிச் சென்றனர். எந்தவித சிறு அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலினும், காவல்துறையினரும் உறுதியாக இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டிருந்தன.
அதேபோல் தீவுத்திடலிலும் தேமுதிக தொண்டர்களுக்காக மொபைல் டாய்லெட், இருக்கைகள், குடிநீர் என எல்லா ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த தேமுதிக தொண்டர்களுக்கு அது மிகவும் பயனாக இருந்தது. அதேபோல் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்றிரவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications