மும்பை வெற்றி இவர்கள் 2 பேர் கையில்தான்.. ஹர்பஜன் சிங் சொன்ன விஷயம்.. யார் அந்த 2 பேர்?
மும்பை அணியின் வெற்றி கேமரூன் கிரீன், டிம் டேவிட் ஆகியோரின் கைகளிலேயே இருப்பதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
சென்னை: டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே மும்பை அணி கம்பேக் கொடுக்க முடியும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மும்பை மற்றும் சென்னை அணிகள் மீண்டும் கம்பேக் கொடுக்க தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் மும்பை அணி தொடர்ந்து இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

மும்பை அணி
2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து கோப்பைகளை வென்ற மும்பை அணி, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கொடூரமான தோல்விகளை சந்தித்தது. அதற்கு அந்த அணியின் வீரர்கள் சிதறியதே காரணமாக பார்க்கப்பட்டது. முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா, டி காக், குருணால் பாண்டியா, ட்ரென்ட் போல்ட் ஆகியோர் அணியில் இருந்து வேறு அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே காரணமாக இருந்தது.

மும்பை அணி திணறல்
அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மா மற்றும் பொல்லார்ட் ஆகியோரின் பேட்டிங் ஃபார்மும் பெரும் பிரச்சனையை கொடுத்தது. அதேபோல் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு சமமான ஆல் ரவுண்டர்களை கண்டுபிடிக்க முடியாமல் மும்பை அணி திணறியது. இந்த சூழலில் தான் மும்பை அணி டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீனை வாங்கியுள்ளது.

கம்பேக் கொடுக்க வாய்ப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் பொல்லார்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளதால், டிம் டேவிட் முழுமையாக விளையாட உள்ளார். அதேபோல் கேமரூன் கிரீனும் முழு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க உள்ளார். இதனால் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஆர்ச்சர் ஆகியோருடன் இவர்களும் இணைவதால் மும்பை அணி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்பஜன் சிங் கருத்து
இந்த நிலையில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங், மும்பை அணி கம்பேக் கொடுக்க இரு வீரர்களின் பங்களிப்பு முக்கியம் என்று தெரிவித்தார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், மும்பை அணி மீண்டு வருவதற்கு கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட்டின் பங்களிப்பு மிக அவசியம். ஏனென்றால் இவர்கள் இருவருமே பொல்லார்ட் மற்றும் ஹர்திக்கின் இடங்களை நிரப்ப வந்தவர்கள்.

ஃபார்ம் முக்கியம்
ஹர்திக் மற்றும் பொல்லார்ட் இடங்களை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கிரீன் மற்றும் டேவிட் இருவருமே திறமையான வீரர்கள். ஆனால் ஐபிஎல் போன்ற தொடரில், முதல் போட்டியில் இருந்தே ஃபார்மில் இருக்க வேண்டும்., ஆனால் ஃபார்மில் இல்லையென்றால், ஐபிஎல் தொடரின் பாதியில் ஃபார்முக்கு வருவது சுலபமல்ல என்று தெரிவித்தார். மும்பை அணி தங்களது முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.












Click it and Unblock the Notifications