Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைம் வந்துடுச்சு.. ரெடியா இருங்க.. அமைச்சர்களை பார்த்து ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.. பரபரக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவுகளுக்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக, வழங்கப்படக்கூடிய அந்த ஓய்வு ஊதியங்கள், இப்போது வழங்கக்கூடிய 1000/- ரூபாயிலிருந்து 1200/- ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றிருக்கக்கூடிய இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியினை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

Time has come finally: CM Stalin important warning to ministers while meeting with them

பொதுவாக தமிழ்நாட்டிலே நான் குறிப்பிட்டது போல, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடிய மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் வந்திருக்கிறது. இந்த ஓய்வூதியத் திட்டங்களுடைய வரலாற்றை நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோம் என்று சொன்னால், 1962-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/- அன்றைய சூழ்நிலையில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

1962-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை பல்வேறு காலக் கட்டங்களில் இந்த ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1000/- மாத ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம், கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த அந்த மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,500/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள். இது தவிர, முதியோர் உதவி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடியவர்களுக்கும் ஓய்வூதியம் நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இது ஒட்டுமொத்தமாக, எல்லா சமூக பாதுகாப்பு திட்டங்களிலிருந்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஏறத்தாழ 30 இலட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் இந்த மாதாந்திர ஓய்வூதியங்களை பெற்று வருகிறார்கள்.

ஆகவே, இவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் தான் இப்போது இந்த 1000/- ரூபாயிலிருந்து 1,200/- ரூபாயாக நாம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, ஏற்கனவே ஓய்வூதியம் வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை கொடுத்து, காத்திருப்போர் பட்டியலில் தற்போது 74,073 பேர் இருக்கிறார்கள். அவர்களில் தகுதியானவர்களுக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்குவதற்கும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது, என்று அறிவித்தார்.

எச்சரிக்கை: இந்த நிலையில் மீட்டிங் முடிந்த பின் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்து ஸ்டாலின் பேசி இருக்கிறார். அதில், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு எதிர்பார்க்கப்பட்டதுதான். அடுத்து எம்எல்ஏக்கள் வீடுகளிலும் நடக்கும். இந்த ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க இப்படி செய்கிறார்கள்.

அதற்கு நாம் அனுமதிக்க கூடாது. முக்கியமாக அமைச்சர்கள் இனியும் ரெய்டுக்கு ரெடியாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்று கவனமாக பார்க்க வேண்டும். தேவைற்ற ஆவணங்களை வைத்துக்கொள்ள கூடாது. இதெல்லாம் போக மிக முக்கியமாக தேர்தல் நெருங்குகிறது.

லோக்சபா தேர்தல் டைம் வந்துவிட்டது. அதனால் கவனமாக இருங்கள். இனிதான் அடிக்கடி ரெய்டு வரும். இதை எல்லாம் பார்த்து நாம் கவலைப்பட கூடாது. பயப்பட கூடாது, நாம் எதையும் துணிச்சலாக எதிர்கொள்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் கூறி இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+