17 ஆண்டு ஜல்லிக்கட்டு வழக்கு!2006 மதுரை ஹைகோர்ட் கிளையில் தொடங்கி 2023-ல் உச்சநீதிமன்றத்தில் நிறைவு!
சென்னை: தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தொடங்கி உச்சநீதிமன்றம் வரை நடைபெற்று வந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றமானது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்கிற ஆகச் சிறப்பான தீர்ப்பை இன்று அளித்தது.
17 ஆண்டுகால ஜல்லிக்கட்டு வழக்கு கடந்து வந்த பாதை:

2006- தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடைவிதித்தது. நீதிபதி பானுமதி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், எருது ஓட்டம் உள்ளிட்ட அனைத்துக்கும் அப்போது தடை விதித்தார். ராமநாதபுரம் கடலாடி கோவில் திருவிழாவில் ரேக்ளாரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2007- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
2008- பாஜகவின் மேனகா காந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்தது.

2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டது.
2009-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சடத்தின் அடிப்படையில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான புதிய வரைமுறைகளை முன்வைத்தது உச்சநீதிமன்றம். ஆனால் அதே ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.
2011-ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட ஒரு நடவடிக்கைதான் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு மிகப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெய்ராம் ரமேஷ். வித்தைகள் காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. 2011-ம் ஆண்டு ஜூலையில் இது தொடர்பான அறிவிக்கை வெளியானது. இதுதான் பீட்டாவின் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் கோரிக்கைக்கு ஆதாரமாகவே இருந்தது.
2012-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டும் நீதிமன்ற அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. 2012-ம் ஆண்டு இறுதியில் 2013-ல் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது.
2014-ல் மீண்டும் பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது 2014-ம் ஆண்டு மே 7-ந் தேதியன்று, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது. இத்தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
2015-ம் ஆண்டு தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து மத்திய அரசின் அறிவிக்கையில் காளைகளை நீக்க வலியுறுத்தியது. 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.
2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்ததை எதிர்த்த தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனால் 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானது.
2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டின் சென்னை முதல் குக்கிராமங்கள் வரை ஒரு காலம் வரை நடைபெற்ற அமைதிவழிப் புரட்சி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனையடுத்து 2017 ஜனவரி 21-ல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்தது.
2018-ம் ஆண்டு 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், ஜல்லிக்கட்டு மற்றும் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான பீட்டா உள்ளிட்டவைகளின் வழக்கை விசாரிக்க தொடங்கியது.
2022: ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு மே 18-ந் தேதி இன்று உச்சநீதிமன்றமானது ஜல்லிக்கட்டு நடத்தலாம்; ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது; ஜல்லிக்கட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications