தமிழ்நாட்டில் பாஜக 3 சீட்களை பிடிக்கும்.. அதிமுகவுக்கு பின்னடைவு.. Times Now - ETG Exit poll ரிசல்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 3 தொகுதிகளில் வெல்லக்கூடும் என டைம்ஸ் நவ் - இடிஜி எக்ஸிட் போல் ரிசல்ட் தெரிவித்துள்ளது. இது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் 100 சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு தேர்தல் முடிவை ஒத்து இருக்கும். பல முறை இந்த கணிப்புகள் துல்லியமானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன, ஆனால் சில நேரங்களில் அவை முடிவுகளுக்கு முரணாகவும் இருந்துள்ளன. இந்நிலையில், இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும், பாஜக கூட்டணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் - ETG நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 2 இடங்களில் வெல்லக்கூடும் என அந்த எக்ஸிட் போல் முடிவு தெரிவிக்கிறது.
மேலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 52 %, பாஜக கூட்டணி 16 %, அதிமுக கூட்டணி 25 சதவீதம் வாக்குகளைப் பெறும், மற்ற கட்சிகள் 7 சதவீதம் வாக்குகளைப் பெறுவார்கள் என டைம்ஸ் நவ் - ETG நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேனியில் அதிமுகவின் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், தற்போது தனித்து நின்ற போதிலும் பாஜக 3, அதிமுக 2 சீட்களை கைப்பற்றும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே ரிசல்ட்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications