வாரத்தில் மூன்று நாட்கள் சேவை.. தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலின் நேரம் இன்று முதல் மாற்றம்
சென்னை: சென்னை தாம்பரத்திலிருந்து வாரத்தில் மூன்று நாட்களுக்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயில் இயக்கப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்திய ரயில்வே சர்வதேச அளவில் மிகவும் பழமையானதாகும். நாடு முழுவதும் தினமும் சுமார் 2.3 கோடி பயணிகளை, இந்தியன் ரயில்வே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்த்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை கொஞ்சம், கொஞ்சமாக மேம்படுத்தப்பட்டு இப்போது வந்தே பாரத் ரயில் வரை விரிவடைந்திருக்கிறது.

தென் மண்டலத்தை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சமீப காலமாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பண்டிகை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாம்பரம்-ராமேஸ்வரத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் நேரம், இன்று முதல் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் (06103) வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கட்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரயில் பயண நேரத்தில் வியாழக்கிழமை (அக்.3) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 11.15 சென்றடையும். ஆனால் இனி திருவாரூருக்கு இரவு 10.50 க்கும் சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கும், திருத்துறைப்பூண்டியில் இரவு 11.25க்கும், முத்துப்பேட்டையில் இரவு 11.48 க்கும், அதிராம்பட்டிணத்தில் இரவு 11.59 க்கும், பட்டுக்கோட்டையில் மறுநாள் அதிகாலை (நள்ளிரவு) 12.16 க்கும், காரைக்குடியில் அதிகாலை 2.20 மணிக்கும், சிவகங்கையில் அதிகாலை 3 மணிக்கும், மானாமதுரையில் அதிகாலை 4 மணிக்கும் புறப்படும். அதிகாலை 4.55 மணிக்கு ராமநாதபுரத்திற்கு சென்றடையும்" என திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு பெரும்பாலும் ஒரு நாளைக்கு 2-3 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இது போதுமான அளவில் இல்லை என்று பயணிகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications