முருகன் சூரசம்ஹாரம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் படங்கள்.. கந்த சஷ்டி நாளில் பகிர்ந்து பரவசமாகுங்கள்!
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று மாலை நடைபெறக்கூடிய சூரசம்கார நிகழ்ச்சியைக் காண்பதற்கு லட்சக்கணக்கானோர் வருகை புரிந்து உள்ளனர். தமிழ்நாட்டில் நடக்க கூடிய மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். சூரசம்கார நிகழ்ச்சியை ஒட்டி வாட்ஸ் ஆப்பில், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக, போஸ்ட்டாக வைக்க.. உங்கள் அன்பானவர்களிடம் ஷேர் செய்ய அசத்தலான புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் பாடல் ஒலிக்க.. அதிகாலை முதலே பல ஆயிரம் பேர் திருச்செந்தூர் நோக்கி வர தொடங்கி உள்ளனர். கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள பக்தர்கள், கடலில் நீராடி காத்திருக்கின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று மாலை நடக்க உள்ளது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளி, கடற்கரையில் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும். சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.

கந்தபெருமானால் ஐப்பசி சஷ்டி திதியில் சூரனின் வதம் நிகழ்ந்ததால் இது கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருநாளில் சக்தி வேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் நற்கதி பெறலாம் என்பது நம்பிக்கை. சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சிவ பூஜை செய்ய விரும்பினார் முருகப்பெருமான். இதற்காக கட்டப்பட்ட கோயில்தான் திருச்செந்தூர் ஆலயம் என்பது அதன் வரலாறுகளில் ஒன்றாகும்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கது கந்தசஷ்டி திருவிழாவாகும். சாதாரணமாக திருச்செந்தூர் முருகப் பெருமானின் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இன்று இந்த சிறப்பு விழா காரணமாக பல ஆயிரம் பேர் இங்கே குவிந்து உள்ளனர். பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி விரதமிருந்து வருகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டும் இந்த விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30க்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற இருக்கிறது. இறுதியாக மாலை 4.30க்கு திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெறும்.

இது போக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து இப்பகுதிகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், 3 தற்காலிக பேருந்து நிறுத்தங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று மாலை நடைபெறக்கூடிய சூரசம்கார நிகழ்ச்சியை ஒட்டி வாட்ஸ் ஆப்பில், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக, போஸ்ட்டாக வைக்க.. உங்கள் அன்பானவர்களிடம் ஷேர் செய்ய அசத்தலான புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த படங்களை டவுன்லோடு செய்து உங்கள் போஸ்டுகளில் பயன்படுத்தலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications