எதே.. ஜோசப் விஜய்க்கு அரோகராவா? புண்படுத்திட்டாங்க! வேல்முருகனை வெளுக்கும் பாஜக & கோ! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்செந்தூர் சூரர் சம்ஹாரம் நிகழ்ச்சியில், வர்ணனையாளர் முருகனுக்கு அரோகரா என்று கூறியதற்கு அடுத்ததாக, முதல்வர் ஜோசப் விஜய்க்கு அரோகரா, அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல முதல்வர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இப்படி ஒரு அவசெயலில் யாரும் ஈடுபட்டது இல்லை என பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடவுளைப் போற்றும் அரோகரா கோஷம்... அரசியல் தனிநபர் துதிக்கானதா? என பாஜக தேசிய மகளிரணி முன்னாள் தலைவர் வானதி சீனிவாசன், வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஏழு நாட்கள் திருவிழா நடைபெற்றது.

Soorasamharam Vijay Annamalai Vanathi Srinivasan

திருவிழாவின் 6ஆம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு ஹோமம் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

தங்க சப்பரத்தில் ஸ்ரீஜெயந்திநாதா் திருவாடுதுறை ஆதின மண்டபத்திற்கு ஏழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கும் வைபவம் நடைபெற்றது. பின்னா் கடற்கடைக்கு வீரவாள் புனித வேல் ஆகியவற்றுடன் ஜெயந்திநாதா் கடற்கரைக்கு எழுந்தருளினாா்.

லட்சக்கணக்கான பக்தா்கள் வேல்,வேல் என்ற கோஷங்கள் எழுப்பினா். சம்ஹாரத்தில் முதலில் யானை தலை (கஜமுகாசுரன்) இரண்டாவது சிங்கத் தலை (சிங்கமுகாசூரன்) களுடன் ஆணவத்துடன் போாிட்ட சூரனின் தலைகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

Soorasamharam Vijay Annamalai Vanathi Srinivasan

அப்போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. நிகழ்வை கோவில் சார்பில் நேரலையாக ஒளிபரப்பு நிலையில் நிகழ்ச்சியை பாடகர் வேல்முருகன் குழுவினர் வர்ணனை செய்தனர். அப்போது முருகனுக்கு அரோகரா எனக் கூறிவிட்டு முதல்வர் ஜோசப் விஜய்க்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என கூறினர். இந்த முழக்கத்தால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுவரை பல முதல்வர்களின் ஆட்சியில் சூரசம்காரம் நடைபெற்ற நிலையில் இது போன்று ஒரு முறையும் நடந்ததில்லை என பக்தர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பாஜக முன்னாள் தலைவரும் வீ தி லீடர்ஸ் தலைவருமான அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு "அரோகரா", இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

"அரோகரா" என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் அறிவுறுத்த வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

Soorasamharam Vijay Annamalai Vanathi Srinivasan

வானதி சீனிவாசனின் கண்டனப் பதிவில்," திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, வர்ணனையாளர்கள் மற்றும் பாடல் குழுவினர் தமிழக முதலமைச்சருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் 'அரோகரா' என முழக்கமிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சிக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும்.

முருகப்பெருமானைப் போற்ற வேண்டிய புனிதமான அரோகரா கோஷத்தை, அரசியல் தலைவர்களின் புகழ்பாடுவதற்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முழங்கும் இறைநாமம்தான் கிடைத்ததா? ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?

லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து வழிபடும் ஒரு புனிதமான திருவிழாவில், இறைவனைப் போற்றும் கோஷத்தைத் தனிநபர்களுக்கான புகழுரையாக மாற்றியிருப்பது இந்து சமய மரபுகளையும், முருக பக்தர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும். சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் தங்களது செயலுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+