திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை
சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர் நவீன் பொல்லினேனி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலா பால் நிறுவனத்தின் மேலாலர் நவீன் பொல்லினேனி. 37 வயதான நவீன் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ரூ. 44.5 கோடியை நிறுவனத்தில் இருந்து கையாடல் செய்யததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து, கையாடல் செய்த தொகையை திருப்பி அளிப்பதாக எழுத்துப் பூர்வமாக கடிதம் ஒன்றை நவீன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம்தாழ்ந்தி வந்த நிலையில், திருமலா பால் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் நவீனை தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டுள்ளனர். பணத்தை திருப்பிச் செலுத்தாவிடில் சிறைக்கு அனுப்பும் நிலை ஏற்படும் என்று கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேலாளர் நவீன் பொல்லினேனி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கை சென்னை குளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், அவர் சமீபத்தில் விடுப்பில் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் போலீஸார் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications