திருப்பதி தந்த மகிழ்ச்சி நியூஸ்.. புத்தாண்டில் கன்னியாகுமரிக்கு போன "லட்டு".. கோயில்களில் வழிபாடு
சென்னை: இன்று தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அதிகாலை தமிழகத்தின் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.. சித்திரை திருநாளையொட்டி, தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்..
உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் இன்று சித்திரை முதல்நாள் பிறப்பை முன்னிட்டு தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து இந்த புத்தாண்டை தமிழக மக்கள் கோலாகலமாக வரவேற்றனர்..

சிறப்பு பூஜைகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டு தின கொண்டாட்டம் இன்று நடந்தது.. அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனமும், அதைத்தொடர்ந்து காய்கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
7 ஆயிரம் லட்டு
இதற்காக இரவு 8 மணி வரை சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்படுகிறது தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக திருப்பதியில் இருந்து 7 ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காகவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரிக்கு லாரிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த லட்டுகள், தமிழ் புத்தாண்டையொட்டி இன்று முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சித்திரை திருவிழா - பழங்கள், பூக்கள் விலை
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பூக்கள், பழங்களின் விலைகளும் தமிழக மார்க்கெட்களில் உயர்ந்துள்ளது.. கனி காணுதல் நிகழ்வு கடைபிடிக்கப்படும். இதற்காக முந்தைய நாள் இரவில், கண்ணாடி வைத்து அதன் முன் பூக்கள், பழங்கள், நாணயங்கள், தங்கம் எடுத்துவைத்து, அதிகாலையில் அதனை முதலில் பார்ப்பது வழக்கம். இதனால், அந்த வருடம் முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
எனவேதான், பூக்கள், பழங்கள் விலைகள் உயர்ந்துள்ளன.. கோவையிலும், பழங்கள், பூக்கள் விற்பனை கடந்த இரண்டு நாட்கள் சூடுபிடித்துள்ளது. கோவை சந்தையில், நேற்று ஆப்பிள் தரத்தை பொறுத்து, 250 முதல் 280 ரூபாய் வரையும், ஆரஞ்ச் 150 ரூபாய்க்கும், சாத்துக்குடி 100 ரூபாய்க்கும், மாம்பழம் 180 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும், திராட்சை 160 -180 ரூபாய்க்கும், வெள்ளரி 60-80 ரூபாய்க்கும், மாதுளை 250 ரூபாய்க்கும், பைானப்பிள் 80 ரூபாய்க்கும், எலுமிச்சை 60-70 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.
அதிமுக எடப்பாடி பழனிசாமி
முன்னதாக, இன்று தமிழ் புத்தாண்டு என்பதால், தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தனர்.. அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.. 'புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம் தன்னுடைய வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications