வேற லெவல்.. செங்கோட்டை போறீங்களா? இது புது டைமிங் + புது ரூட்.. இன்று முதல் ஆரம்பம்.. நோட் பண்ணுங்க
சென்னை: பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பல்வேறு அதிரடிகளை செய்து வரும் தெற்கு ரயில்வே, இப்போது இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
ஈரோடு -திருநெல்வேலி தினசரி பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 24ம் தேதி முதல் (இன்று) ஈரோடு -திருநெல்வேலி ரயில் செங்கோட்டை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "16845/16846 ஈரோடு -திருநெல்வேலி தினசரி முன்பதிவு இல்லாத பயணிகள் ரயிலை தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நீடிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தள்ளது. ஈரோடு முதல் திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (இன்று) ஜனவரி 24ம் தேதி முதலே செங்கோட்டை வரை இயக்கப்படும்.
ஜனவரி 24ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் ஜனவரி 25ம் தேதி செங்கோட்டைக்கு செல்லும். இந்த ரயில் வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு பிறகு சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடயம், பவூர்சத்திரம், மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் நின்று இறுதியாக செங்கல்பட்டு போகும்.
ஈரோடு: இந்த ஈரோடு - செங்கோட்டை ரயிலை மத்திய தகவல் ஒளிபரபப்பு துறை இணையமைச்சர் எல் முருகன், ஈரோடு ரயில் நிலையத்தில் நாளை பிற்பகல் 2 மணி அளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து தினமும் பிற்பகல் இரண்டு மணிக்கு புறப்பட்டு இரவு 8.50க்கு திருநெல்வேலி சென்றடையும்.
அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் அதாவது இரவு 8.55க்கு திருநெல்வேலியில் புறப்படும் ரயில், சேரன்மாதேவிக்கு இரவு 9.12க்கும், 9.22க்கு கள்ளிடைக்குறிச்சியும், இரவு 9.27க்கு அம்பாசமுத்திரமும், இரவு 9.42க்கு கீழக்கடாயமும், 9.56க்கு பவூர் சத்திரமும், இரவு 10.10க்கு தென்காசியும், இரவு 11.10க்கு செங்கோட்டையும் சென்றடையும்.
அம்பாசமுத்திரம்: மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு புறப்படும் ஈரோடு ரயில் தென்காசிக்கு காலை 5.13க்கு வரும். அதன்பிறகு பாவூர்சத்திரம், கீழக்கடாயம், அம்பாசமுத்திரம், கள்ளிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் நின்றுவிட்ட காலை 6.25க்கு திருநெல்வேலி வரும். திருநெல்வேலியில் இருந்து காலை 6.30க்கு புறப்படும் ரயில் பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு சென்றடையும்" இவ்வாறு தெற்கு ரயில்வே தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications