ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரமோற்சவம்.. தமிழக பக்தர்கள் பயணிக்க ஸ்பெஷல் பஸ்.. இன்று முதல் ரெடி
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணத்தில் இருந்து, திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 52 விரைவு பேருந்துகளுடன், 48 சிறப்பு பேருந்துகளை இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15 முதல் 23ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது.

அக்டோபர் 15 ஞாயிறு - பெரிய சேஷ வாகனம்
அக்டோபர் 16 திங்கள் சின்ன சேஷ வாகனம் ஹம்ச வாகனம்
அக்டோபர் 17 செவ்வாய் சிம்ம வாகனம் முத்துப்பந்தல் வாகனம்
அக்டோபர் 18 புதன் கற்ப விருட்ச வாகனம் சர்வ பூபால வாகனம்
அக்டோபர் 19 வியாழன் மோகினி அலங்காரம் கருட சேவை
அக்டோபர் 20 வெள்ளி அனுமந்த வாகனம் புஷ்பக விமானம், கஜ வாகனம்
அக்டோபர் 21 சனி சூர்ய பிரபை வாகனம் சந்திர பிரபை வாகனம்
அக்டோபர் 22 ஞாயிறு தங்க ரத ஊர்வலம் அஸ்வ வாகனம்
அக்டோபர் 23 திங்கள் சக்ர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து இன்று முதல் 26ஆம் தேதி வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணத்தில் இருந்து, திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 52 விரைவு பேருந்துகளுடன், 48 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல, விரைவு பேருந்துகளை அதிகரித்து இயக்க உள்ளோம். பயணியர், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும், tnstc official செயலி மூலம், முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திருமலையில் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிறது
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications