திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் உயிரிழந்த காவல் ஆய்வாளர்! ரூ.25 லட்சம் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு
சென்னை: சென்னை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த கொரட்டூர் காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானின் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் தரப்பில் வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆண்டுதோறும் காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று இந்த ஆண்டுக்கான திருமலை திரப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அக்.2ம் தேதி தொடங்கிய இந்த ஊர்வலம், அக்.3ம் தேதி முதல் அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து அக்.7ம் தேதி திருமலையைச் சென்றடையும். இன்று மதியம் திருக்குடை அம்பத்தூர் பகுதி வழியாக எடுத்து செல்லப்பட்டிருந்தது. அப்போது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் கொரட்டூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துக்குமாரும் ஈடுபட்டிருந்தார்.
மதியம் 12 மணியளவில் அம்பத்தூர் பாடி-டிஎச் சாலையில் ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆய்வாளர் மயக்கடைந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட சக காவலர்கள், அருகில் இருந்த கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
திருப்பதி திருமலை திருக்குடை ஊர்வலத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்துகுமார் (வயது 47) என்பவர் இன்று (04.10.2024) சென்னையில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உடனடியாக சென்னை, முகப்பேரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 01.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையடைந்தேன்.
காவல் ஆய்வாளர் முத்துகுமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவல் ஆய்வாளர் முத்துகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தாவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications