Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக உடன் மதிமுக கூட்டணி வைக்க எதிர்த்தவர் துரைசாமி..இணைக்க சொல்வது ஏன்? கேட்கிறார் வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி வைப்பதையே எதிர்த்தவர் திருப்பூர் துரைசாமி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்த நிலையில் தங்களின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ளார் வைகோ. திமுகவிற்கு எதிராக வேலை செய்து விட்டு இப்போது திமுக உடன் மதிமுகவை இணைக்க சொல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் வைகோ.

மதிமுகவின் அரசியல் வானில் இடியும் மின்னலுமாய் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. துரை வைகே அரசியலுக்கு வந்ததில் இருந்தே கலகக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. வாரிசு அரசியல் என்று கூறி திமுகவை விட்டு வெளியேறி மதிமுகவை தொடங்கியவர் வைகோ அவரே வாரிசு அரசியலை கொண்டு வரலாமா என்ற கேள்விகள் எழ தொடங்கின.

Tirupur Duraisamy opposed DMK alliance with DMK Why is he asking to merge the party today? asks Vaiko

துரை வைகோ மதிமுகவில் அரசியல் பணி செய்வதை விரும்பாத பலரும் கட்சியில் இருந்து வெளியேறினர். கட்சிக்குள் இருந்த பலரும் மனதிற்குள் குமுறிக்கொண்டுதான் இருந்தனர். மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எல்லாவற்றுக்கும் மேலாக மதிமுகவை திமுக உடன் இணைத்து விடுங்கள் என்று கடிதம் எழுதியது பரபரப்பை பற்ற வைத்தது.

திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதத்தில், மதிமுக தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சி பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தார்கள். ஆனால் அண்மை காலமாக அவரின் குழப்பமான செயல்பாடுகள் காரணத்தினால் கட்சியின் நிர்வாகிகளும் ,தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார்கள் . கட்சியில் மகனை அரவணைப்பதும் தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.

வைகோ இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால், மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் குறித்து விளக்கம் அளித்த வைகோ, மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் முடிவை மறுத்தார். திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை அலட்சியப்படுத்துவதாக கூறினார். மதிமுக தொண்டர்கள் எண்ணம் அதுவல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

Tirupur Duraisamy opposed DMK alliance with DMK Why is he asking to merge the party today? asks Vaiko

இதைத் தொடர்ந்து திருப்பூர் துரைசாமியை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி வைகோவை கட்சியினர் வலியுறுத்த தொடங்கினர். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி வைகோவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதனால் திருப்பூர் துரைசாமியை மதிமுகவிலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில்தான் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பொது வாழ்க்கையில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். தனது வீட்டில் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றும் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளிலும் தான் சேரப் போவதில்லை என்றும் கூறியுள்ள அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்தார். மதிமுகவில் நீடிப்பதாகவே கூறி வந்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர், அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மதிமுத இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கெனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முன்னணி தோழர்களை மதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய கூறிவிட்டனர்.

இதனால் அவர்கள் திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படியென்றால் நாம் ஏற்கெனவே திமுகவில் இணைந்து விட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக் கூடிய சூழல் இல்லை. வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. தற்போது நான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்குகிறேன். ஆனால் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை என துரைசாமி தெரிவித்துள்ளார்.

Tirupur Duraisamy opposed DMK alliance with DMK Why is he asking to merge the party today? asks Vaiko

துரைசாமியின் இந்த முடிவு பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி வைப்பதையே எதிர்த்தவர் துரைசாமி. தேர்தலின் போது திமுகவிற்கு எதிராக வேலை செய்தவர். இப்போது மதிமுகவை திமுகவுடன் இணைக்க சொல்வது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

துரை வைகோ அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பாலானவர்கள் வரலாம் என்று சொன்ன பிறகுதான் கட்சி பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டார். துரை வைகோ கட்சிக்குள் வந்ததில் இருந்தே அவருக்கு எதிராக குரல்கள் ஒலித்தன. திருப்பூர் துரைசாமி கூறியதில் எதுவுமே உண்மையில்லை. கட்சியின் வரவு செலவு கணக்குகள் முழுவதுமாக ஆடிட் செய்யப்படுகிறது என்றும் வைகோ கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+