திருத்தணி முருகன் கோயில்ல யார்னு பாருங்க.. கையில் தீபத்துடன் வந்து நின்ற மேனகா! மறு நொடியே இப்படி?
சென்னை: கோவையில் யானை ஒன்று போலீஸ் ஜீப்பை தாக்கியதும், இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போலீஸ்காரர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் நடந்த சம்பவம் அதற்கு மேல் பக்தர்களுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது.. நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை, குரங்குகளால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கை என்ன?
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் நேற்று காட்டு யானை ஒன்று புகுந்துவிட்டது.. இந்த தகவறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், விரைந்து சென்று காட்டுயானையை கண்காணித்தனர்...

அங்கிருக்கும் மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் பாதை வழியாக ஜீப்பில் சென்று காட்டு யானையை காட்டுப்பகுதியை நோக்கி விரட்டினார்கள்.. ஆனால், அந்த காட்டு யானை திடீரென்று யூடர்ன் அடித்து, வனத்துறை வாகனத்தை நோக்கி வந்தது. இதனால் வனத்துறையினர் உடனடியாக ஜீப்பை நிறுத்திவிட்டார்கள்..
ஜீப்பை நெருங்கி வந்த யானை
நெருங்கி வந்த அந்த யானை, ஆக்ரோஷமாக பிளிறியபடி வந்து துதிக்கையால் வனத்துறை வாகனத்தை தாக்க துவங்கியது.. இதனால், அந்த ஜீப்பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனே சுதாரித்துக்கொண்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார்கள்.. இதில் ஜீப் பின்னால் நகர்ந்ததால், அதிர்ஷ்டவசமாக யானையின் தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார்கள்..
வனத்துறை வாகனத்தை, காட்டுயானை தாக்கி சேதப்படுத்துவதை, அங்கிருந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது..
திருத்தணி முருகன் கோயில்
இந்த அதிர்ச்சிக்கு நடுவே, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பக்தர்களை குரங்குகள் தாக்கியது திகிலை தந்தும் வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலை பொறுத்தவரை, முருகப்பெருமானின் ஐந்து படை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது.. இதனால் நாள்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை, கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்கள் போன்ற சிறப்பு நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், பக்தி கோஷமிட்டும் முருகனை தரிசிக்க கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
முருகன் கோயிலில் குரங்குகள் தொல்லை
இந்த திருத்தணி மலைப்பகுதியில் இருப்பதால் குரங்குகளும் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.. தற்போது இந்த கோவிலில் குரங்குகள் தொல்லை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து சென்றுவிடுகின்றவாம். அதேபோல, பக்தர்கள் ஏதாவது பார்சல்களை கொண்டுவந்தால், அவைகளையும் குரங்குகள் பாய்ந்து பறித்துவிடுவதாக புகார்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.
கையில் தீபத்துடன் மேனகா
நேற்றுகூட தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த மேனகா என்ற 45 வயது பெண், திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார்.. இதற்காக தீபம் ஏற்றும் பகுதியில் நின்று மேனகா கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ வந்த குரங்குகள், திடீரென மேனகா மீது பாய்ந்து கையில் கடித்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மேனகா வலியால் அலறி துடித்தார்.. மேனகாவை தவிர, மேலும் 2 பெண் பக்தர்களை குரங்குகள் கடித்தன. அதுபோலவே, மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமார் (28), குமார் (33) ஆகிய 2 போலீஸ்காரர்களையும் குரங்குகள் கடித்தன.
ஒரே நாளில் 5 பேர்
ஒரேநாளில் 5 பேரை குரங்குகள் கடித்து குதறிய நிலையில், படுகாயமடைந்த 5 பேரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.. அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு 5 பேருமே வீடு திரும்பினார்கள்..
இப்படி இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் கடித்திருக்கிறதாம்.. இதனால் நிம்மதியாக கோவிலுக்கு வந்து சாமி கும்பிட முடியவில்லை என்றும், பக்தர்களை பயமுறுத்தும் வகையில் சுற்றி திரியும் குரங்குகளை உடனடியாக பிடிக்க கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கருவறைக்குள் குரங்கு
பக்தர்கள் கூட்டம் அதிகமாகும்போது குரங்குகள் கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவமும் கடந்த காலங்களில் திருத்தணியில் நடந்துள்ளது.. இப்படித்தான் ஒரு குரங்கு, கோவில் மூலஸ்தானத்தில் புகுந்துவிட்டது.. இதனால் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த குரங்கை விரட்ட ஊழியர்கள் போராடினர். இதனால் பூஜை மற்றும் அபிஷேகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், ஒரே நாளில் 5 பேரை குரங்குகள் கடித்துள்ளதால், பக்தர்களிடம் பீதியும், கலக்கமும் காணப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications