“2034 தொகுதிகளில் வெல்வோம்..” உளறி கொட்டிய திருத்தணி தவெக வேட்பாளர் என்ன ஆனார்? நிலவரம் இதுதான்
சென்னை: திருத்தணி சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக சத்யகுமார் களமிறங்கியிருந்தார். அவர் பிரச்சாரத்தின்போது செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், தவெக 2034 தொகுதிகளில் வெற்றிப் பெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருத்தணி தொகுதியில் மொத்தம் 2,61,857 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 2021-ம் ஆண்டு தேர்தலில் இங்கு 2,90,624 வாக்காளர்கள் இருந்தனர், ஆனால் தற்போதைய தரவுகளின்படி சுமார் 2.61 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இந்தத் தேர்தலில் திருத்தணி தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதிமுக சார்பில் ஜி.ஹரி, தேமுதிக சார்பில் டி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் போட்டியிட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருத்தணியில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் ஜி. ஹரி தற்போது 18,548 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் எம். சத்யகுமார் 17,012 வாக்குகள் பெற்று மிக நெருக்கமான போட்டியை அளித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் சுமார் 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருத்தணி தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக-வின் எஸ். சந்திரன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இந்த முறை அதிமுக மற்றும் தவெக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் தேர்தலிலேயே இங்குத் தனது பலத்தை நிரூபித்து ஆளுங்கட்சியான திமுக-வை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தபால் வாக்குகள் மற்றும் தொடக்க காலச் சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும், தவெக வேட்பாளர் சத்ய குமார் மிகக் குறைந்த இடைவெளியில் பின்தொடர்வதால் இறுதி முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.
-
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications