சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களா? - குவைத்தில் தமிழர் சுட்டுக்கொலை சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

Google Oneindia Tamil News

சென்னை : குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருலே லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்த முத்துக்குமார், கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டுக்கு சென்ற நிலையில் 7ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் செய்தியை அறிந்து முத்துக்குமாரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது உடலை விரைந்து மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

 ****களை சைலண்டா அடிக்கனும்! இல்லையா.. மத கலவரம் பண்ணனும்! திருவாரூர் பாஜக தலைவரின் பகீர் ஆடியோ! ****களை சைலண்டா அடிக்கனும்! இல்லையா.. மத கலவரம் பண்ணனும்! திருவாரூர் பாஜக தலைவரின் பகீர் ஆடியோ!

 சுட்டுக்கொலை

சுட்டுக்கொலை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருலே லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்று வேலைக்கு சேர்ந்ததும் வேலை கடினமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில் குவைத் நாட்டிற்கு சென்று நான்கு நாட்களிலேயே அதாவது 7ஆம் தேதி முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 மனைவி கண்ணீர்

மனைவி கண்ணீர்

இதையடுத்து குவைத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முத்துக்குமரனின் உடலை மீட்டுக் கொண்டு வரவும், கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முத்துக்குமரனின் மனைவி வித்யா கண்ணீருடன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். இந்நிலையில், விரைந்து முத்துக்குமாரின் உடலைத் தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மர்மமான முறையில்

மர்மமான முறையில்

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வறுமை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்குப் பணிக்குச் சென்ற திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமார் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முத்துக்குமாரின் மரணத்தால் பேரிழப்பைச் சந்தித்து, தவித்து நிற்கும் அவரது பெற்றோருக்கும், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துப் பெருந்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஒட்டகம் மேய்க்கும் வேலை

ஒட்டகம் மேய்க்கும் வேலை

பெரும் தொகை கொடுத்து இடைத்தரகர் மூலமாக, குவைத் நாட்டிற்கு கடந்த 3ஆம் தேதி தூய்மை பணி வேலைக்குச் சென்ற முத்துக்குமார், அங்கு ஏமாற்றப்பட்டு ஒட்டகம் மேய்க்கும் பணி அளிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். கடினமான பணி குறித்து வேதனையோடு தமது குடும்பத்தினரிடம் தெரிவித்ததோடு, தரகரிடமும் தான் ஏமாற்றப்பட்டது குறித்து முத்துக்குமார் முறையிட்டுள்ளார். மேலும், இந்தியத் தூதரகம் மூலம் தாயகம் திரும்பிட முத்துக்குமார் முயற்சித்து வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி முத்துக்குமார் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 கொடுமைப்படுத்தி

கொடுமைப்படுத்தி

முழுமையான உடல் நலத்துடன் வேலைக்குச் சென்ற முத்துக்குமார் ஒரு வாரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை அவரது குடும்பத்தினரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முத்துக்குமாரின் பெற்றோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கப்படாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

அலட்சியப்போக்கு

அலட்சியப்போக்கு

மோடி அரசின் கீழ் இயங்கும் இந்தியத் தூதரகம் போலவே, தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகமும் செயலற்ற துறையாகவே உள்ளது. முத்துக்குமாரின் மரணத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மேல் நடவடிக்கைகள் குறித்து இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டும். வெளிநாடுகளில் தமிழர்கள் கொல்லப்படும் ஒவ்வொரு முறையும் இந்திய தூதரகத்தின் தொடர் அலட்சியப்போக்கு, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மத்திய அரசின் மாற்றாந்தாய் மானப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடேயாகும்.

விரைந்து கொண்டு வாருங்கள்

விரைந்து கொண்டு வாருங்கள்

ஆகவே, இனியாவது ஆளும் பாஜக அரசு குவைத் அரசிடம் உடனடியாகத் தொடர்புகொண்டு, முத்துக்குமாரின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு, சட்டப்படி கடும் தண்டனை தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு அதிகபட்ச துயர்துடைப்பு நிதியைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், குவைத்திற்கான இந்தியத் தூதரகத்தின் மூலமாக, விரைந்து முத்துக்குமாரின் உடலைத் தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Naam Tamilar Party chief coordinator Seeman has insisted that the government should provide due justice to the family of Muthukumar from Tamil Nadu, who was shot dead in Kuwait.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X