"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்!
சென்னை: தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜு சாக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். "பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா இடம்பெற்றுள்ளது. சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமாகா-வுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்தார் ஜிகே வாசன். இதையடுத்து, தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.

இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகிவிட்டதை அடுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளர்களை நாளை காலை அறிவிக்க உள்ளார். இந்த தேர்தலில் ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 5 தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு சவாலாகவே அமைந்துள்ளது. இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிற தொகுதிகள். அதுவும் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளில் தற்போதைய திமுக அமைச்சர்கள் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜு சாக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
"5 இடங்களில் ஒரு இடத்தில் கூட தமாகா ஜெயிக்காது. சென்னை மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் சீட்டை கூட ஜிகே வாசனால் கேட்டு வாங்க முடியவில்லை. பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தாமரை சின்னத்தில் நின்றுவிட்டு நாளை உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் எப்படி சீட் வாங்குவீர்கள்" என செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications