Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுவராஜா மட்டும் இல்லை.. பல நிர்வாகிகள் பதவி விலகல்.. என்ன நடக்கிறது தமாகாவில்? வெளியான விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம். யுவராஜா, தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் நீண்ட காலம் தான் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் யுவராஜா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் யுவராஜா.

TMC GK Vasan Yuvaraja

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கியபோது யுவராஜாவும் அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் ஜி.கே.வாசனை விட்டு பிரிந்து சென்ற நிலையிலும் யுவராஜா தமாகாவிலேயே தொடர்ந்து பயணித்தார்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா, 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்தார்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், இந்த கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் எந்தப் பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமாகா தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக, பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேசி இருந்தனர். தமாகா தலைவர்கள் பலரும் அதிமுகவுடன் கூட்டணி செல்வதையே விரும்பியதாக கூறப்பட்டது.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்த நிலையில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அந்த சந்திப்பு குறித்து, தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்தேன் என விளக்கம் அளித்திருந்தார் யுவராஜா.

இந்நிலையில், யுவராஜா தமாகாவில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் கட்சி மாறக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதனை மறுத்துள்ளார் யுவராஜா.

இதுகுறித்து யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நடைபெற்ற தமாகா செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கட்சியின் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நான் கடந்த 10 ஆண்டுகளாக இளைஞரணி மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், எனது மாநிலத் தலைவர்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, அதற்கான கடிதத்தை கடந்த 16ஆம் தேதி ஜி.கே. வாசனிடம் வழங்கினேன். அதே நேரத்தில், தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக வாசன் தலைமையின் கீழ் பயணிப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.

தமாகா பொதுச் செயலாளர் விடியல் சேகர் கூறுகையில், "மாநில செயற்குழுக் கூட்ட முடிவுகளின்படி, மாநில, மாவட்ட, துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தலைவர் ஜி.கே.வாசன் எடுத்த முடிவின்படி, தற்போதைய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கை என்பது கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள இயல்பான ஒன்று என்பதால் இதில் அரசியல் எதுவும் இல்லை. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிர்வாகிகள் பட்டியலை ஜி.கே.வாசன் விரைவில் வெளியிடுவார். ஓரிரு நாட்களில் புதிய நிர்வாகிகள் பதவியேற்க உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+