ஜிகே வாசன் கொடுத்த சிக்னல்! அதிரும் பாஜக! அதிமுக பக்கம் சாய்கிறதா தமாக? இன்று நடந்த முக்கிய மீட்டிங்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேசினார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. மறுபக்கம் அதிமுகவும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்து இருக்கிறார்.

இதனால் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் இல்லை. பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக கழற்றிவிட்டதால் தனித்து விடப்பட்டு இருக்கும் பாஜக, தனியாக ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தற்போது வரை எந்த கட்சியுடனும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பாமக மற்றும் தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணியுடன் செல்லுமா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து செல்லுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நீடிக்கிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் வைத்து அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications