களமிறங்கிய தமுமுக.. சூடுபிடிக்கும் பொது சிவில் சட்ட விவகாரம்! ஒரே கிளிக்கில் எதிர்க்கும் இணையதளம்
சென்னை: மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் ஒரே கிளிக்கில் ஈமெயில் அனுப்பும் முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது தமுமுக.
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜவாஹிருல்லா தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் மெயில் அனுப்பும் வகையில் லிங்கை வழங்கி இருக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பு தெரிவிக்கையில், "அனைவரின் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியப்படட்டுமாக! பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் கருத்துக்கூற இந்திய சட்ட ஆணையம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு புரிதலுக்காக பொது சிவில் சட்டம் என்று நாம் கூறினாலும், அனைத்து மத, இன, மொழி, வாழ்வியல், பின்புலம் கொண்டவர்களுகும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் கொண்டு வரப்படுதலே இதன் நோக்கம் ஆகும்.
சங்பரிவார பாசிஸ்டுகள் முன்னெடுக்கும் இந்த கோட்பாட்டின் உள்நோக்கம், முஸ்லிம்கள் தமது மார்க விவகாரங்களில் தற்போதுள்ள நிலையின்படி, இசுலாமிய சாரியத் சட்டங்களை பின்பற்ற இயலவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே ஆகும். திருமணம், மணவிலக்கு , வாரிசுரிமை, பாகபிரிவினை உள்ளிட்டவற்றில் முஸ்லிம்கள் இசுலாமிய ஷரியத் சட்டத்தை பின்பற்றி வரும் நிலை தற்போது உள்ளது.
இதற்கு மாறாக முஸ்லிம்கள் ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாத நிலையை உருவாக்கி மார்க்கத்திற்கு முரணான சட்டங்களை முஸ்லிம்கள் மீது திணிக்கும் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படுவதற்கான முன்னெடுப்புகளை பாசிஸ்டுகள் செய்து வருகின்றன. இதற்கு நாட்டு மக்கள் வலிமையான கண்டனத்தையும். எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
இந்திய சட்ட ஆணையத்தின் ஆங்கில கடிதம் பின்வரும் இணைப்பின் மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் உள்ள கடிதத்தை காப்பி செய்து தங்கள் மொபைலில் தோன்றும் கூகுள் குரோம் செயலியில் திறந்து, அதில் இடம்பெறும் பெயர் உள்ளிடுதல் பெட்டியில் உங்கள் பெயரை உள்ளிட்டு, அங்கு தோன்றும் நீலப் பொத்தானை கிளிக் செய்தால், உங்களின் மின்னஞ்சல் செயலி திறக்கும்.அதில் ஏற்கனவே இடம்பெற்று உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் எதிர்ப்பை பதிவு செய்திட இயலும். [email protected]" என்று குறிப்பிட்டு உள்ளது.
அதேபோல் https://tmmk.in/noucc/ என்ற லிங்கை பகிர்ந்து இருக்கும் அந்த அமைப்பு அதில் பெயரை டைப் செய்து OPEN GMAIL என்ற பட்டனை அழுத்தினாலே மத்திய அரசு துறை செயலாளர்கள், குடியரசுத் தலைவரின் செயலாளர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கு மின்னஞ்சல் செல்லும் வகையிலான தளத்தை கட்டமைத்து உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications