Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100% தேர்ச்சி.. மாஸ் காட்டும் சென்னை மாநகராட்சி! 10ம் வகுப்பு தேர்வில் கில்லியாக அசத்திய 14 பள்ளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுதேர்வில் புரசைவாக்கம் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 14 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது. 2023-24 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகள் 79 சதவிகித தேர்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், 2024-25 கல்வியாண்டில் 7 சதவிகிதம் வரை தேர்ச்சி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 91.39 சதவிகிதமாக இருந்த மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம், இந்த ஆண்டு 93.80ஆக அதிகரித்துள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல் சென்னையை பொறுத்தவரை 90.73 தேர்ச்சி விகிதத்துடன் 34வது இடத்தை பிடித்துள்ளது.

TN 10th Exam Results Chennai Corporation Schools Pass Percentage increased to 86 and 14 Schools achieved all pass Record in 10th Exam Results

சென்னை மட்டுமல்லாமல் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பட்டியலில் பின் தங்கி இருக்கிறது. அதேபோல் மொத்தமாக தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,917 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர். அதில் 1,867 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,105 பள்ளிகள் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சியை பதிவு செய்திருந்தன. இம்முறை சுமார் 800 பள்ளிகள் கூடுதலாக 100 சதவிகித தேர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 1,364 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தன. இம்முறை 1,867 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்று சாதித்துள்ளன.

இதனால் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் தரம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல், சென்னையில் மட்டும் புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட 14 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023-24 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளின் 79 சதவிகித தேர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்தது.

தற்போது 2024-25 கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் 86ஆக உயர்ந்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் சென்னை அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் 90 சதவிகிதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+