பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா?..ஜூன் 27ல் துணை தேர்வு.. மே 23 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 27 முதல் ஜூலை 4ஆம்தேதி வரைக்கும் துணைத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் , 11ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்களும் எழுதினர். இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி மே 4ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 4,04,904 பேர் மாணவர்கள், 4,30,710 பேர் மாணவிகள் ஆவர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்கள் கடைசி இடத்தையும் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3649 பேர் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3584 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 320 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்னர்.
தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என கல்வியாளர்கள் கூறியுள்ளனர். விரைவில் துணை தேர்வுகளை எழுதி நடப்பாண்டே உயர்கல்விக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களின் பள்ளிகள் அல்லது தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications