எஸ்எஸ்எல்சியில் 496 மார்க் எடுத்த யுவஸ்ரீ..அப்பா இறந்த சோகத்திலும் 500க்கு 428 மார்க் எடுத்த திலகா
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் பல சாதனைகள் படைத்துள்ளனர். அப்பா இறந்த சோகத்திலும் அவரது கனவை நனவாக்க வேண்டும் என்று படித்து 500க்கு 428 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் திருக்கோவிலூரை சேர்ந்த திலகா. அதே போல விவசாய தொழில் செய்பவரின் மகள் வறுமையான சூழ்நிலையிலும் படித்து 496 மதிப்பெண்கள் எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பல மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி 428 மதிப்பெண்கள் பெற்றது குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்- பெயிண்டர், பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், திலகா என்ற ஒரு மகளும் உள்ளனர். திலகா அதே பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், முருகதாஸ், பெயிண்டர், உடல்நலம் குன்றி கடந்த ஏப்ரல் மாதம்10ஆம் தேதி என்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில், முருகதாஸின் மகள் திலகா தனது தந்தை முருகதாஸ் உயிரிழந்தார். தனது தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும் பொழுதே அன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வும் அதன் தொடர்ச்சியாக மற்ற தேர்வுகளும் எழுதி இருந்தார். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 428 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். தந்தை உயிரிழந்த சோகத்திலும் திலகா தொடர்ச்சியாக தேர்வு எழுதி 428 மதிப்பெண் பெற்றது இப்பகுதி மக்களிடையே வரவேற்பையும், நிகழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனது தந்தை என்னை எப்போதுமே நன்றாக படிக்க வேண்டும் அரசு வேலைக்கு போக வேண்டும் எனக்கூறுவார். அதுதான் என்னுடைய ஆசை என என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லி வந்தார். அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆவரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் யுவஸ்ரீ, பாலசுப்பிரமணியன் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும், மகளை எவ்வித குறையும் இல்லாமல் தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து படித்த யுவஸ்ரீயும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் தலா 99 மதிப்பெண்களும் அறிவியல் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். சாதித்த யுவஸ்ரீயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications