விஜயதாரணி மைக்கில் பேசிட்டு இருக்கும்போதே.. நடந்த "சம்பவம்".. ஒன்று சேர்ந்த அதிமுக + காங்கிரஸ்
விஜயதாரணி பேசி கொண்டிருந்தபோதே மைக்கை நிறுத்திவிட்டனர்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸின் விஜயதரணி திமுகவுக்கு முக்கிய கோரிக்கை விடுத்து பேசியுள்ளார்.. மேலும் கடந்த கால அதிமுகவின் திட்டத்தையும் அவர் பாராட்டி பேசினார். டது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்தார்...

விஜயதாரணி
முன்னதாக, நீர்வள துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசினார். அப்போது அவர் பேசியது இதுதான்: "கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய மற்றும் சிறிய என மொத்தம் 4,500 குளங்களை இருந்தன.. ஆனால் இப்போது வெறும் 2500 குளங்கள் மட்டுமே இருக்கின்றன.. அதனால் மற்ற குளங்களையும் உடனடியாக மீட்க வேண்டும்.. இப்படி செய்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் மக்கள் விவசாயம் செழிக்கும்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஜல்லி மண் போன்றவை லாரிகள் மூலம் பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.. இதன் காரணமாக ஜல்லி மற்றும் மணல் விலை அதிகமாகிவிட்டது.. எனவே, இலவச வீடு திட்டத்திற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் அதனைக் கொண்டு வீடு கட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.. இளம் பெண்கள் உயர்கல்விக்கு ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் வரவேற்க கூடியது..

திமுக அரசு
உதவி தொகை வழங்கி வரும் நிலையில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை திட்டத்தை கைவிடக் கூடாது திருமண உதவி திட்டத்தை தொடரும் பட்சத்தில் திமுக அரசிற்கு நற்பெயர் கிடைக்கும்... அதனால் நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்?

மைக் ஆப்
இவ்வாறு விஜயதாரணி பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென அவருடைய மைக் ஆப் ஆகிவிட்டது.. இதனால் ஒன்றும் புரியாமல் ஒரு கணம் விழித்தார் விஜயதாரணி.. அப்போதுதான், அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டதால், அவருக்கான மைக் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.. இதனால் விஜயதாரணிக்கு மறுபடியும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.

தாலிக்கு தங்கம்
இதை பார்த்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், விஜயதாரணிக்கு பேச வாய்ப்பு வழங்குங்கள் என்று சட்டப்பேரவை துணை தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்... அதிமுக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே கோரிக்கை விடுக்கவும், துணை சபாநாயகரும் அதனை விஜயதாரணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கினார்.. மறுபடியும் விஜயதாரணி தன் பேச்சை தொடர்ந்தார்.. அப்போது, அதிமுக அரசின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை ஆதரித்து பேசினார். இதைக் கேட்டதும் அதிமுகவினர் பூரித்து போய் விட்டனர்.

தொட்டு காட்டிய நாகரீகம்
அதிலும், பாப்பாரப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தன் அருகில் இருந்த எல்லா ரோஜா பூக்களையும் வாரி எடுத்து கொண்டு, விஜயதாரணியிடம் கொண்டு போய் வழங்கினார்.. இதை பார்த்ததும் சட்டப்பேரவையில் இருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், விஜயதரணிக்காக அதிமுக பரிந்துபேசியதும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதும் அரசியல் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டு காட்டியது..!
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications