ஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த கட்சி, இந்த கட்சி எல்லாமே டெல்லியின் தயவை அதுக்கு இதுக்கு என பலவகைகளில் நாடி நிற்கின்றன.
அண்மையில் அந்த கட்சியின் டிசைடிங் செல்லம் ஒன்று டெல்லியில் முகாமிட்டிருந்தது. ஆகப் பெருந்தலைகளாகவே பார்த்து பேசுவது என்பதற்காக தவமாய் தவமிருந்து பார்த்ததாம் இந்த செல்லம்.

கிடைத்தது 2 சந்திப்புகள்
மொத்தமே 2 சந்திப்புகளுக்குத்தான் வாய்ப்பாம். அதில் ஒருவாய்ப்பைப் பொறுத்தவரையில் நான் பேசுவதற்கு எதுவுமே இல்லை என கூறியிருந்தாராம்.. அப்ப நீங்க பாராட்டியது எல்லாம் பொய்யா கோப்பால் என்ற ரேஞ்சுக்கு புலம்பி திரும்பியதாம் டிசைடிங் செல்லம்.

படுத்தேவிட்டார் ரேஞ்சுக்கு சரணாகதி
இதனையடுத்து கடவுளின் செயலுக்கு பேர்போன பிரமுகரை எப்படியோ ஒருவழியாக பிடித்து பேசியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் இப்படி எல்லாம் செய்துவைத்தால் நாங்க என்ன ஆவது? உங்களோடத்தானே இருப்போம் என பல முறை சொல்லிவிட்டோமே என குலதெய்வ கோவிலில் சத்தியம் செய்யாத குறையாக சரணாகதி அடைந்திருக்கிறார்.

ஓவரா ஆட்டம் போடாதீங்க
அதற்கு அந்த பிரமுகர் சொன்ன பதிலில் இருளடைத்து போயிருக்கிறார் இந்த டிசைடிங் பார்ட்டி. ஆமா, ரொம்ப ஓவரத்தான் ஆட்டம் போட்டு வசூல் ராஜாவாகிட்டீங்க போல.. ஏகப்பட்ட புகார்கள்... செம காண்டாக்கிவைத்திருக்கீங்க.. அதுக்குதான் அந்த மாதிரி ஃபைன் எல்லாம் வருது.. இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் என சொல்ல மிளகாய் ஊறுகாயை கடித்தது போல உள்ளுக்குள் செல்லத்துக்கு திகுதிகுவென இருந்ததாம்.

உங்க குடுமி அங்க...
பின்னர், இனிமேல் நான் எல்லாம் எதுவும் பேச முடியாது.. இருவர் அணிதான் பேசும் செய்யும்.. உங்க விவகாரம் உங்க குடுமி எல்லாம் இனி அங்கதான் ராஜா எனவும் கையை காட்டிவிட்டாராம். தேன்கூட்டுல கைய வெச்சோமா? குளவி கூட்டுல கைய வெச்சோமான்னு தெரியாம அந்த டிசைடிங் கேரக்டரும் டெல்லி சவுத்பிளாக், நார்த் பிளாக்கில் திருதிருவென வலம் வந்ததாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications