கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு.. பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!
சென்னை: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்தது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார்.
டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். 22ம் தேதியிலிருந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் ஏற்கெனவே திமுக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அதற்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

குழுவில் எத்தனைப்பேர்?
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம் குழு அமைத்திருக்கிறது. குழுவின் தலைவராக கழக பொருளாளர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டிருக்கிறார். குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
முன்னதாக காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது. ஆனால், திமுக குழு அமைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்து. 70 நாட்களாக காத்திருந்தோம் என்றும் கூறியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் குழு அமைக்கப்படும் என்றும், பிப்.22ம் தேதி முதல் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும் திமுக ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தை
இந்த குழு காலை,மாலை என கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தும். எனவே விரைவில் கூட்டணியுடன் தொகுதி பங்கீடுகள் அடுத்தடுத்து இறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த தொகுதிகளை கேட்கும் கட்சிகளுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியில் அதிக தொகுதிகளை கேட்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்?
அதாவது, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 40 தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால், திமுக 28 தொகுதிகளை மட்டுமே தர முன்வந்திருந்தது. எனவே காங்கிரஸுடன் கடைசியாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின்
முன்னதாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு நேற்று விருப்ப மனு கொடத்திருந்தார். அதேபோல சேப்பாக்கத்தில் உதயநிதி, திருச்செந்தூரில் கனிமொழி போட்டியிட விருப்பம் தெரிவித்து நிர்வாகிகள் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.
தொகுதி பங்கீடு
தற்போதைய நிலவரப்படி திமுக 160 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கும் என்றும், மொத்தம் 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 16 தொகுதிகளில் கூட்டணி கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
எந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்?
அதேபோல காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் + 1 எம்பி சீட்டும், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் + 1 எம்பி சீட், சிபிஎம் மற்றும் சிபிஐ-க்கு தலா 6 தொகுதிகள், மக்கள் நீதிமையத்திற்கு 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications