நட்சத்திர தொகுதியாகுமோ சேப்பாக்கம்.. திமுக உதயநிதி ஸ்டாலின்,பாஜக குஷ்பு,நாம் தமிழர் மன்சூர் அலிகான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின், அதிமுக அணியில் பாஜகவின் நடிகை குஷ்பு, நாம் தமிழர் கட்சியின் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட வாய்ப்புள்ளதால் நட்சத்திர தொகுதியாக மாற உள்ளதாக தெரிகிறது.

சட்டசபை தேர்தலில் கூட்டணிகள், தொகுதி பங்கீடுகள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு கட்சியிலும் தங்களுக்கே சீட் என நம்புகிறவர்கள் தொகுதிகளில் படுதீவிரமான களப்பணிகளை செய்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் தொகுதிகளில் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் போட்டி?

உதயநிதி ஸ்டாலின் போட்டி?

சென்னையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சிறிய தொகுதி. இங்கு அதிக முறை திமுக வென்ற தொகுதி. அதனால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இங்கு போட்டியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறதுசென்னையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சிறிய தொகுதி. இங்கு அதிக முறை திமுக வென்ற தொகுதி. அதனால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இங்கு போட்டியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது

பாஜகவின் குஷ்பு போட்டி?

பாஜகவின் குஷ்பு போட்டி?

அதிமுக கூட்டணியில் பாஜகவின் நடிகை குஷ்பு இந்த தொகுதிக்கு குறிவைத்திருக்கிறார். பாஜக பொதுச்செயலாளர் சி.டி. ரவியுடன் இணைந்து தொகுதி முழுவதும் வலம் வந்தார் குஷ்பு. அத்துடன் குஷ்புவுக்கு ஓட்டு போடுவீங்களா? எனவும் சிடி ரவி பொதுமக்களிடம் கேட்டு பரபரப்பை கிளப்பினார்.

நாம் தமிழர் வேட்பாளர் மன்சூரலிகான்

நாம் தமிழர் வேட்பாளர் மன்சூரலிகான்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தாம் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூரலிகான் நூதன முறைகளில் பிரசாரம் செய்தது கவனத்தை ஈர்த்தது. அதே பாணியில் சேப்பாக்கத்திலும் மன்சூரலிகான் அதிரடி காட்டுவார் என தெரிகிறது.

எதிர்பார்ப்புகளுடன் சேப்பாக்கம்

எதிர்பார்ப்புகளுடன் சேப்பாக்கம்

இப்படி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக பிரபலங்கள் களமிறங்குவதால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி கவனத்தை பெற்றுள்ளது. தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இருக்கும் என்பதுடன் பெரும் பரபரப்பும் நிலவும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+