Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"யோவ்"... என்ன மாயமோ தெரியலை.. டக்குன்னு கோபத்தின் உச்சிக்குப் போன கமல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் "உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா" என்ற தலைப்பில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் மறைமுகமாக பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை காரசாரமாக மட்டுமல்லாமல் ஒருமையிலும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பிரசார வீடியோ வெளியிட்டுள்ளார். மகாத்மா காந்தியடிகள் சிலையின் கீழ் நின்று பேசுகிற அந்த வீடியோவில் கமல் கூறியுள்ளதாவது:

TN Assembly Election: Kamal Haasan slams PM Modi and Edappadi Palaniswami

இவர் (காந்தி) இப்ப உயிரோடு இருந்திருந்தா சந்தோசமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறீங்களா? இவர் நினைச்ச இந்தியாவின் பெருமை அதிகரிச்சு இருக்குதோ இல்லையோ மற்ற எல்லாம் அதிகரிச்சு இருக்கிறது.

வேலை வாய்ப்பின்மை, கொலை குற்றங்கள், விலைவாசி, பெட்ரோல் விலை எப்படி ஏறி இருக்கு தெரியுமா?

சரி.. இவர் (காந்தி) மாதிரி கோவிச்சுகிட்டு தெருவுல இறங்கி சத்யாகிரகம் பண்ணலாம்னா அதுவும் குண்டும் குழியுமா இருக்கு! ஏன்னா இப்ப எலக்சனுக்காக அவசரம் அவசரமாக போட்ட ஊழல் ரோடுதான இது!

சரி ஊழல் தொலையட்டும் விடுங்க!

அய்யா அம்பேத்கர் கொடுத்த அரசியல் சட்டத்தின் பலத்தில் நாம வாழ்ந்திடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தா...

மேல இருந்து ஒருத்தரு என்ன மொழி பேசுறதுன்னு சொல்றாரு- என்ன சாப்பிடறதுன்னு சொல்றாரு- என்ன சிந்திக்கனும்னு சொல்றாரு..

இந்த தேசத்தை எப்படி நேசிக்கனும்னு அவர் சொல்லி கொடுக்கிறாரு

யோவ்... உன்னோட ஊர் மேப்பில மேல இருக்கிறதால அதான் மேலிடம்னு நினைச்சுடாத நீ..

நீ.. இங்கிருந்து பாரு.. இதுதான் தலைவாசல்...

இப்படி கோவமாக இங்க இருந்து ஒரு ஆள் பேசுவாருன்னு பார்த்தா அங்க போய் இந்த ஆளு கையை கட்டிட்டு நிற்கிறாரு... இதுல சைரன் வேற...

இவங்க வாழ்க்கை ஒளிமயமாக இருக்கனும்... ஆனா நம்ம வாழ்க்கை?

இந்த இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு வரனும்னா ஒரே ஒருவழிதான் இருக்கு டார்ச்லைட்...

சீரமைப்போம் தமிழகத்தை! நாளை நமதே!

இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். பொதுவாக கமல்ஹாசன் வழக்கமான அரசியல்வாதிகளைப் போல ரொம்ப அட்டாக் செய்வதில்லை.

ஆனால் குணா படத்தில் இடம்பெறும் பாடல் வரிகளைப் போல, அதென்னமோ தெரியலை.. என்னமாயமோ தெரியலை... இப்படி ஒருமையில் விளாசி தள்ளிவிட்டார் கமல்.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பும் கூட கமல்ஹாசனின் வீடியோக்கள் பிரபலமாகின, வைரலாகின. அதிலும் அவர் கோபமாக டிவியை தூக்கி ரிமோட்டை எறிந்த வீடியோ ரொம்பவே வைரலானது. இப்போது மீண்டும் ஒரு அதிரடியை இந்த வீடியோவில் காட்டியுள்ளார். தொடர்ந்து பலரும் கமல்ஹாசனை பாஜகவின் பி டீம் என்று வர்ணித்து வருகின்றனர். அவரும் அதற்கு தொடர்ந்து பதில் கொடுத்துதான் வருகிறார்.

ஆனால் இன்று அவர் உபயோகித்த "யோவ்" .. கொஞ்சம் உக்கிரமாகவே இருக்கிறது. இது உண்மையான யோவ் ஆக இருந்தால் நிச்சயம் அவர் பி டீம் அல்ல...! காலம்தான் போகப் போக அதை நிரூபிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+