இதென்ன புதுசா இருக்கே.. "செத்தாலும் அமைச்சராகத்தான் சாவேன்".. வறட்டு பிடி பிடிக்கும் தெற்கத்தி விஐபி
அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் தொடங்கி உள்ளது
சென்னை: செத்தால் அமைச்சராகத்தான் சாவேன் என்று ஒரு சீனியர் அதிமுக புள்ளி பிடிவாதமாக சொல்லி வருகிறாராம்... ஆனால், அதிமுக தலைமையோ, வேறு ஒரு கணக்கை போட்டு வருகிறதாம்.
தேர்தல் விரைவில் வர உள்ளதால், கூட்டணி, சீட் விவகாரங்கள் பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டன.. இதுபோக, சொந்த கட்சியில் இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தொடர்ந்து பதவியை தக்க வைக்கும் வழிகளில் இறங்கி வருகின்றனர்.
இதனிடையே, கட்சிக்குள் இருக்கும் ஒருசில அமைச்சர்கள் ஏடாகூடமாக பேசி விடுவதும், சர்ச்சைக் கருத்துக்களை சொல்லி விடுவதாலும் பல சிக்கல்கள் எழுந்தன.. இதனால் ஒரு கட்டத்தில் முதல்வர் தரப்பே அதிருப்தி அடைந்ததாகவும் சொல்லப்பட்டது..

சீனியர்
அதிலும் ஒரு சீனியர் அமைச்சர், எதிர்க்கட்சியை அநாகரீகத்தின் உச்சிக்கே சென்று பேசிய நிலையில், "அவரை கொஞ்சம் பார்த்து பேச சொல்லுங்க" என்று அமைச்சர்களிடமும் எடப்பாடியார் சொல்லும் அளவுக்கு விவகாரம் சென்றதாகவும் கூறப்பட்டது..

கருத்துக்கள்
இதை மனதில் வைத்துதான், மற்ற புள்ளிகள் அமைதியாக காய் நகர்த்தி வருகிறார்கள்.. எங்கு சென்றாலும் நலத்திட்ட உதவிகளை மட்டும் தந்துவிட்டு திரும்பி விடுகிறார்கள்.. எதற்குமே வாய் திறப்பதில்லை... எந்த கருத்தையும் சொல்வதுமில்லை.

சீனியர்கள்
இந்நிலையில், ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அந்த வகையில், முதல்வரிடம் அவரது நலம்விரும்பிகள் சிலர், "வரும் தேர்தலில் ஜூனியர் ஆதரவாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து சீட் தந்தால், அவர்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள், சீனியர்கள் அப்படி இருக்க மாட்டார்கள், அதனால் முடிந்தவரை ஜூனியர்களாக இந்த முறை களம் இறக்குங்கள்" என்று தெரிவித்தார்களாம்..

பிடிவாதம்
அதனால், கட்சியில் மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மட்டும் சீட் கொடுக்க எடப்பாடியாரும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல முக்கிய மாவட்டங்களில் உள்ள சீனியர்களை கட்சி பணியிலேயே இறக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.. இது கேள்விப்பட்டதாலோ என்னவோ, இதில் ஒரு அமைச்சர், செத்தால் நான் அமைச்சராக தான் சாவேன்... எனக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும்" என்று பிடிவாதமாக இருக்கிறாராம்!
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications