அதிமுகவுக்கு பெரிய கும்பிடு... திமுக கூட்டணியில் இணைகிறது தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி இணையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கினார். 2016-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுகவுடன் நெருக்கம்
இருப்பினும் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்தார் தமிமுன் அன்சாரி. பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்திலும் தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

திமுக கூட்டணி?
இதனிடையே சட்டசபை தேர்தலில் தினகரன் கட்சியுடன் தமிமுன் அன்சாரி கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் பெரும்பாலானோர் திமுக அணியில் சேரவேண்டும் என வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லையில் ஆலோசனை
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக வரும் 23-ந் தேதி நெல்லையில் நடைபெறும் மஜக ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது. திமுக கூட்டணியானது முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைத்து தக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக அணியில் இடம்பெற்றுள்ளன.

திமுக- ஓவைசி கட்சி
ஓவைசி கட்சியும் திமுக அணியில் இடம்பெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஓவைசி கட்சியை கூட்டணியில் சேர்ப்பது இல்லை என திமுக முடிவெடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications