தீவிர பிரசாரம்... நடிகர் கார்த்திக் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதி- கொரோனா 'நெகட்டிவ்'
சென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் நடிகருமான கார்த்திக் திடீர் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

சட்டசபை தேர்தல் களமானது அனல் பறக்கும் நிலையில் திடீரென நடிகர் கார்த்திக் பிரசாரத்துக்கு வந்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்புவுக்கு கார்த்திக் பிரசாரம் செய்தார்.

அத்துடன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராஜ்யசபா எம்.பி. பதவியை விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் தாம் எந்த கட்சி, கூட்டணிக்கும் ஆதரவு இல்லை என்றார் நடிகர் கார்த்திக்.

இந்த நிலையில் இன்று திடீரெனன்று கார்த்திக்குக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு கார்த்திக்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் கார்த்திக் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications