இருக்கிற அணிகள் போதாதுன்னு இதுவேறயா... திமுகவில் உருவாகுதாம் சோசியல் மீடியா விங்?
சென்னை: திமுகவில் புதியதாக சோசியல் மீடியா விங் என்ற அணி உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்த காலத்தில் அவரது கட்டுப்பாட்டிலும் கண்ணசைவிலும்தான் கட்சியின் அத்தனை நடவடிக்கைகளும் இருந்தன. கருணாநிதிக்கு குடும்ப ரீதியாக அழுத்தங்கள் பல நேரங்களில் தரப்பட்டிருக்கின்றன.

புதிய அதிகார மையங்கள்
ஆனாலும் கட்சியை தம்முடைய நேரடிக் கட்டுப்பாட்டிலேயே கருணாநிதி காலம் முழுவதும் வைத்திருந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் தலைமை குடும்பத்தின் பெயரால் பல அதிகார மையங்கள் மையங்கொண்டிருக்கின்றன. இதுதான் திமுகவில் பெரும் சலசலப்புக்கும் காரணமாக இருக்கிறது.

ஆளுக்கொரு திசையில் ஒவ்வொரு டீமும்..
டெல்லி அரசியலை கவனிக்க ஒரு டீம், முரசொலி விவகாரங்களுக்கு ஒரு டீம், இளைஞரணி செயலாளருக்கு ஒரு டீம், தலைவருக்கு ஒரு டீம், இவை இல்லாமல் தேர்தல் வியூகத்துக்கு பிகே டீம், கட்சிக்கான தகவல் தொழில் நுட்ப அணி என ஒரு டீம்.. இப்படி பல அதிகார மையங்களாக ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கின்றன.

அதிகார மையங்களின் பனிப்போர்
இந்த அதிகார மையங்களுக்கு இடையேயான பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் திமுகவினர் எந்த டீம் சொல்வதைக் கேட்பது என்பது தெரியாமல் குழம்பிப் போயிருக்கின்றனர். திமுகவில் ஏற்கனவே மகளிர் அணி ஒன்று இருக்கிறது. இது போதாது என்று அதிமுக பாணியில் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கும் முயற்சிகளும் ஒருபுறம் நடக்கிறது.

திமுக சோசியல் மீடியா விங்
இத்தனையும் போதாது என்று சோசியல் மீடியா விங் என ஒன்று உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே பல டீம்களில் இடம்கிடைக்காத பலரும் இந்த சோசியல் மீடியா விங்கில் எப்படியாவது இடம்பிடித்துவிடலாம் என இலவு காத்து கிடக்கிறார்களாம். ஆனால் இருக்கிற குழப்பத்துக்கே தீர்வு இல்லை.. இனியும் ஒரு புதிய டீமா என பொங்கிப் பார்க்கின்றனர் சீனியர்கள்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications